30 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 6.1%

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்ற வர்த்தகப் போரினால் சீனா நிறைய பாதிப்புக்குள்ளானது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 6.1 சதவீதமாக மட்டுமே உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2020, 05:45 PM IST
  • 30 ஆண்டுகளில் முதல் முறையாக, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 6.1% ஆக மட்டும் உயர்ந்தது.
  • டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வளர்ச்சி 6% ஆக இருந்தது.
  • சீனாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்திற்கான இலக்கு 6-6.5% ஆக நிர்ணிக்கப்பட்டது.
30 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 6.1% title=

புது டெல்லி: அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்ற வர்த்தகப் போரினால் சீனா நிறைய பாதிப்புக்குள்ளானது. சீனாவில் நுகர்வோர் தேவை கணிசமாகக் குறைந்துள்ளது. அது எந்தளவுக்கு என்றால், 2019-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று தசாப்தங்களாக குறைந்தது. அதாவது 30 ஆண்டுகளில் முதல் முறையாக, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 6.1 சதவீதமாக உயர்ந்தது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்  விகிதம் 2018 இல் 6.6 சதவீதமாகக் குறைந்தது. இது ஏற்கனவே 1990 க்குப் பிறகு மிகக் குறைந்த மட்டமாக இருந்தது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வளர்ச்சி 6% ஆக இருந்தது. 

சீனாவின் வர்த்தக உபரி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நலன்கள் தொடர்பாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போராட்டத்தில், அமெரிக்கா வரியை அதிகரித்தது. இது சீன ஏற்றுமதியாளர்களை பாதித்தது. இதனால் சீனாவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கும் என பல நிபுணர்கள் கணிந்திருந்தன. இருப்பினும், நிபுணர்களின் மதிப்பீடுகளை விட முழு சீன பொருளாதாரத்தில் மிகக் குறைவான தாக்கத்தை தான் ஏற்படுத்தி உள்ளது.

இந்த வாரம், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக யுத்தம் முடிவடைந்துள்ளது என்பதற்கான அறிகுறி தென்படுகிறது. மேலும் இருவரும் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் கீழ், கூடுதல் கட்டண உயர்வை ரத்து செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளதுடன், அமெரிக்க பண்ணை ஏற்றுமதியை வாங்க சீனா உறுதியளித்துள்ளது. ஏற்கனவே இரு தரப்பிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட வரி உயர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

2019 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இலக்கு 6-6.5% ஆக  வைக்கப்பட்டது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 6% பதிவு ஆகி உள்ளது. 2019 ஆம் ஆண்டில், வாடிக்கையாளர் செலவு, முதலீடு மற்றும் தொழிற்சாலை உற்பத்தி அனைத்தும் பலவீனமடைந்து உள்ளன.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News