இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இருக்கும்: டிரம்ப்

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி இருக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2020, 07:51 AM IST
இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இருக்கும்: டிரம்ப் title=

வாஷிங்டன்: இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி இருக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஃபாக்ஸ் நியூஸ் சேனலில்“டவுன் ஹால்” நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “எனக்கு முழு நம்பிக்கை இருக்கு, உறுதியாக சொல்கிறேன், இந்த ஆண்டின் இறுதியில் கொரோனா தடுப்பூசி போடுவோம் என்றார்.

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார், அதாவது அவர்கள் (மாணவர்கள்) திரும்பிச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார். 

கோவிட் -19 ஐத் தடுப்பதற்கான வழியை முதன்முதலில் கொண்டு வருவதற்கு அமெரிக்காவும் பிற நாடுகளும் போட்டியிடுவதால், விரைவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ணிப்பு.

அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்களை காட்டிலும், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மற்றொரு நாடு கண்டுபிடித்தால், அதுவும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களுக்கு நான் தலை வணங்குவேன் என்று டிரம்ப் கூறினார். 

எந்த நாடு கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடித்தாலும்  எனக்கு கவலையில்லை. சரியான தடுப்பூசியைப் பெற விரும்புகிறேன் என்றார்.

மேலும் அவரிடம், வழக்கத்திற்கு மாறாக விரைவாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி செயல்பாட்டில் மனித சோதனைகளின் போது ஏற்படும் அபாயங்கள் குறித்து கேட்டதற்கு, டிரம்ப் “அவர்கள் தன்னார்வலர்கள். அவர்கள் எதை செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.” எனக் கூறினார்.

Trending News