20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் மரணம்..! மருத்துவர்கள் சொன்னது என்ன?

Water Toxicity: தண்ணீர் குடித்தால் மரணம் ஏற்படுமா? ஒரு பெண் அதிக தண்ணீர் குடித்ததால் இறந்துள்ளார். என்ன நடந்தது? இந்த பதிவில் காணலாம்.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Aug 4, 2023, 06:49 PM IST
  • 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர்.
  • குடித்த பெண் மரணம்.
  • அதிர்ச்சியில் தவிக்கும் குடும்பம்
20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் மரணம்..! மருத்துவர்கள் சொன்னது என்ன? title=

அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்துள்ளார். தண்ணீர் குடித்தால் மரணம் ஏற்படுமா? என்ன நடந்தது? இந்த பதிவில் காணலாம். 

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான இந்தியானாவைச் சேர்ந்தவர் தான் 35 வயதான ஆஷ்லே சம்மர்ஸ் ( Ashley Summers). இவர் கடந்த மாத தொடக்கத்தில், இந்தியானாவில் உள்ள ஏரிக்கு நேரத்தை செலவழிக்க சென்றுள்ளார். அப்போது அவர் லேசான தலைவலி மற்றும் உடலில் நீர் பற்றாக்குறை (dehydration) ஆனது போல உணர்ந்துள்ளார். அதோடு 20 நிமிடத்தில் 4 அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்களை அதாவது கிட்டதட்ட 2 லிட்டர் தண்ணீரை குடித்துள்ளார். 

அவருக்கு அன்று தொடர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்ததாம். அதைப்பற்றி குடும்பத்தினரிடமும் சொல்லியுள்ளார். ஏரியில் படகு சவாரியும் செய்துள்ளார் சம்மர்ஸ். அதன்பிறகு தான் மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். 

மருத்துவர்கள் சம்மர்ஸ்-க்கு  ஹைபோநெட்ரீமியா இருப்பதைக் கண்டறிந்தனர்.  அவருக்கு நீர் நச்சு (Water toxicity) பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. ரத்தத்தில் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலை தான் அது. 

உடலில் அதிக நீர் இருக்கும்போது சோடியத்தின் அளவு பெரும்பாலும் குறையுமாம். அந்த நேரத்தில் அதிக தண்ணீர் குடித்ததால் அது செல்களை வீக்கம் அடைய செய்துள்ளதாம். குறிப்பாக அவரின் மூளை செல்களை அது வீக்கமடைய செய்துள்ளது. அதனால் மயக்கமடைந்த ஆஷ்லீ சம்மர்ஸ் கோமாவுக்கு சென்று பின் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.

இது தான் அவரது இறப்புக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. மருத்துவர்களே ஆஷ்லீ சம்மர்ஸ் மரணம் அதிர்ச்சியாக உள்ளதென கூறியுள்ளனர்.

"சில விஷயங்கள் ஒருவரை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக நடக்கும் விஷயம் என்னவென்றால், உங்கள் உடலில் அதிகப்படியான தண்ணீர் போகும்போது போதுமான சோடியம் இல்லாமல் போய்விடுகிறது" என்றுநச்சுயியல் நிபுணர் டாக்டர். பிளேக் ஃப்ரோபெர்க் கூறினார்.

கூடுதல் தகவல்

ஒரு நபர் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை.  ஒருவரது உடல் செயல்பாடு மற்றும் உடல் எடை ஆகிய இரண்டும் தான் உங்கள் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை தீர்மானிக்கும்.  இருப்பினும் சராசரி நாட்களில் 3 லிட்டர் தண்ணீரும், கோடையில் 3.5 லிட்டர் தண்ணீரும் குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  அதிகப்படியாக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன.  சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக தண்ணீர் குடிப்பது அவசியம் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் அது தவறு.  அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகம் கடினமாக உழைக்கிறது, இதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படும்.

மேலும் படிக்க | கருப்பைக்குள் செலுத்தப்பட்ட ஆசிட் ! சொல்ல முடியாத துன்பம் அனுபவித்த பெண்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News