இப்ராஹிம் ரைசி யார்? அவரின் கொள்கைகள் என்ன? விபத்து சதியா? -முழு விவரம்

Who Was Ebrahim Raisi: மிகவும் பலம் வாய்ந்த மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தது மத்திய ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரைப் பற்றி அறிந்துக் கொள்ளுவோம். 

Written by - Shiva Murugesan | Last Updated : May 20, 2024, 03:47 PM IST
இப்ராஹிம் ரைசி யார்? அவரின் கொள்கைகள் என்ன? விபத்து சதியா? -முழு விவரம் title=

Ebrahim Raisi Profile: இப்ராஹிம் ரைசி யார்: நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக ஈரான் நாட்டு ஊடகம் உறுதி செய்துள்ளது. மேலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த மொத்தம் 8 பேரும் உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. மோசமான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டாலும், இந்த ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் பலம் வாய்ந்த மற்றும் முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. யார் இந்த இப்ராஹிம் ரைசி? அவரைப் பற்றி அறிந்துக் கொள்ளுவோம்.

மேலும் படிக்க - மலைகளில் மோதிய ஹெலிகாப்டர்... ஈரான் அதிபரின் நிலை என்ன? - விபத்தால் பெரும் பரபரப்பு

இப்ராஹிம் ரைசி யார்? அவரின் வாழ்க்கை பயணம்

1960 ஆம் ஆண்டு வடகிழக்கு இரானில் உள்ள புனித நகரமான மஷாத்தில் வசித்த மதகுரு குடும்பத்தில் இப்ராஹிம் ரைசி பிறந்தார். தற்போது அவருக்கு வயது 63.

அவருக்கு ஐந்து வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தை மத போதனைகளை போதித்து வந்தார். தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இப்ராஹிம் ரைசியும் மத சம்பந்தமான கோட்பாடுகளை படித்து கற்றறிந்தார்.

இளம் மாணவராக இருந்தபோதே, அவர் 1979 இல் மேற்கத்திய ஆதரவுடைய ஷாவிற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு அமைப்புக்களில் தன்னை இணைந்துக் கொண்டார். 

இஸ்லாமியப் புரட்சியில் தொடர்ந்து இருந்து வந்த்ய ரைசி தெஹ்ரானில் உள்ள ஷாஹித் மோதஹாரி பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். அங்கு அவர் இஸ்லாமிய நீதித்துறை மற்றும் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனது 20 வது வயதில் இப்ராஹிம் ரைசி தெஹ்ரானுக்கு அருகில் உள்ள கராஜ் நகரின் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஈரானில் முக்கியமான பதவிகளை நீண்ட காலமாக வசித்து வந்தார்.

அவரின் பரந்த லட்சியங்களுக்காக ரைசி தெஹ்ரானின் தலைமை வழக்கறிஞராகவும், பின்னர் மாநில இன்ஸ்பெக்டரேட் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார். 

2006 வாக்கில், அவர் நிபுணர்களின் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது உச்ச தலைவரை நியமித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் மற்றும் அதன் உறுப்பினர்கள் சக்திவாய்ந்த கார்டியன் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது.

2014 இல் ஈரானின் அரசு ஜெனரல் வழக்கறிஞராக ஆனார். அதன் பின்னர் ஈரான் அரசியலில் தன்னை இணைந்துக் கொண்டார்.

2017 இல் ரூஹானியை தோற்கடிக்க ரைசியின் முதல் முயற்சி தோல்வியடைந்தது. ஏனெனில் ரூஹானி 57% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதன்பிறகு 2019 இல் அயதுல்லா அலி கமேனி அவரை நிபுணர்கள் சபையின் துணைத் தலைவராக நியமித்தபோது, அவர் மீண்டும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறினார். அவருக்கு புதிய ஊக்கத்தை அளித்தது.

மேலும் படிக்க - பாஸ்போர்ட் இருந்தா போதும்! எங்க ஊரை சுத்திப் பார்க்க வாங்க! இந்தியர்களை வரவேற்கும் ஈரான்!

2021 அதிபர் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றார். ஆனால் அந்த வாக்கெடுப்பு இஸ்லாமியக் குடியரசின் வரலாற்றில் மிகக் குறைந்த அளவில் வாக்குப்பதிவு பதிவானது. 

2022 இன் பிற்பகுதியில், ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி காவலில் வைக்கப்பட்டிருந்த போது மரணம் அடைந்தது, அவருக்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்பு அலை வெடித்தது.

மார்ச் 2023 இல், நீண்டகால எதிரிகளான ஈரானும் சவுதி அரேபியாவும் ராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்கும் ஒரு ஆச்சரியமான ஒப்பந்தத்தை அறிவித்தன. இது மத்திய ஆசியாவில், குறிப்பாக வளைகுடா பிராந்திய அமைதி திரும்பலாம் என எதிர் பார்க்கப்பட்டது.

ஈரானின் அடுத்த அதிபர் யார்?

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பாதுகாவலராகவும் நாட்டின் ஷியைட் இறையாட்சிக்குள் அவரது பதவிக்கு சாத்தியமான வாரிசாகவும் ரைசி காணப்பட்டார்.

ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் ஒருவர் இறந்தால், அந்நாட்டின் துணை அதிபரான முகமது மொக்பர் அதிபராக செயல்படுவார்.

ஈரானுக்கு ஆதரவாக இருக்கிறோம் -சவூதி அரேபியா

பாரம்பரியமாக ஈரானுக்கு போட்டியாக இருக்கும் சவூதி அரேபியா, இரு நாடுகளும் சமீபத்தில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், இந்த கடினமான சூழ்நிலைகளில் ஈரானுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறியுள்ளது.

இஸ்ரேலை எச்சரித்த இப்ராஹிம் ரைசி

கமேனியின் பாதுகாவலர் மற்றும் சாத்தியமான வாரிசாகக் கருதப்படும் இப்ராஹிம் ரைசி, கடந்த மாதம் இஸ்ரேலை கடுமையாக எச்சரித்தார். சியோனிச இஸ்ரேலிய ஆட்சி 75 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்களுக்கு எதிராக அடக்குமுறையை செய்து வருகிறது என்று கூறினார்.

முதலில் நாம் அபகரிப்பவர்களை வெளியேற்ற வேண்டும், இரண்டாவதாக, அவர்கள் ஏற்படுத்திய அனைத்து சேதங்களுக்கான செலவையும் செலுத்த வேண்டும், மூன்றாவதாக, அடக்குமுறையாளரையும், அபகரிப்பவர்களையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர் இஸ்ரேலுக்கு எதிராக கூறினார்.

இப்ராஹிம் ரைசி மரணத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு?

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இஸ்ரேல் சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.

மேலும் படிக்க - 11 நாட்களுக்கு ஒட்டு துணி போட வேண்டாம்! அடடா..சொகுசு கப்பலில் ராஜ வாழ்க்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News