கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழுவில் புதிதாக எந்த முடிவுகளையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவும் நேற்று தொடங்கியது.
அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று சிகாகோ நகரில் பேரணி நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள கட்டடத்தில் இருந்து கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.