7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறது அகவிலைப்படி, ஜனவரியில் வரும் ஜாக்பாட்

7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்களைப் பொறுத்தது. இதில் சாதகமான அதிகரிப்பு இருந்தால், அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2022, 02:39 PM IST
  • அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
  • AICPI புள்ளிவிவரங்களில் ஏற்றம்.
  • ஆண்டு ஊதியத்தில் இந்த அளவுக்கு உயர்வு இருக்கும்.
7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறது அகவிலைப்படி, ஜனவரியில் வரும் ஜாக்பாட் title=

ழாவது ஊதியக்குழு முக்கிய அப்டேட்: நாடு முழுவதும் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின் புதிய புள்ளிவிவரங்களை பார்த்தால், 2023 ஆம் ஆண்டில், முதல் மாதத்திலேயே ஊழியர்களின் அகவிலைப்படி நல்ல அளவில் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்தக்கூடும். இந்த உயர்வு ஜனவரி மாதத்தில் நிகழ வாய்ப்புள்ளது.

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 

சமீபத்தில், ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்படுகிறது. அகவிலைப்படி அதிகரிப்பு AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்களைப் பொறுத்தது. இதில் சாதகமான அதிகரிப்பு இருந்தால், அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இதன்படி, ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதம் வழங்கப்படுகிறது. இது 42 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? 

அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 720 ஆகவும், அதிகபட்ச சம்பளம் மாதம் ரூ. 2,276 ஆகவும் அதிகரிக்கக்கூடும். 

மேலும் படிக்க | DA-க்குப் பிறகு ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வாய்ப்பு! எவ்வளவு சம்பளம் உயரும்? 

AICPI புள்ளிவிவரங்களில் காணப்படும் ஏற்றம்

தொழிலாளர் அமைச்சகம் ஏஐசிபிஐயின் புள்ளிவிவரங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 131.2 ஆக இருந்தது. செப்டம்பர் மாத புள்ளிவிவரங்களை ஜூன் மாத புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏஐசிபிஐ குறியீடு 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், ஆகஸ்ட் மாத புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏஐசிபிஐ குறியீட்டில் 1.1 சதவீதம் அதிகரிப்பு காணப்படுகிறது.

ஆண்டு ஊதியத்தில் இந்த அளவுக்கு உயர்வு இருக்கும்

2023 ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில், குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளமாக மாதம் ரூ.18,000 பெறும் ஊழியர்களின் ஆண்டு ஊதியத்தில் ரூ.8,640 உயர்வைக் காணலாம்.

மறுபுறம், அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதம் ரூ.56,900 பெறும் ஊழியர்களுக்கு ஆண்டு ஊதியத்தில் ரூ.27,312 அதிகரிப்பு இருக்கும். 

மேலும் படிக்க | 8th Pay Commission அமலுக்கு வருகிறதா? முக்கிய அப்டேட் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News