மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டபுள் ஜகபாட்: பம்பர் ஊதிய ஏற்றம்

7th Pay Commission: மக்களவை தேர்தலுக்கு முன், மோடி அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை மீண்டும் 4 சதவீதம் உயர்த்தலாம் என்றும், இதனுடன், ஃபிட்மென்ட் ஃபாக்டரும் அதிகரிகப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 28, 2023, 04:20 PM IST
  • ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன?
  • சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயரும்.
  • ஃபிட்மென்ட் காரணி 2.57 -இல் இருந்து 3.68 சதவிகிதமாக அதிகரிக்கலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டபுள் ஜகபாட்: பம்பர் ஊதிய ஏற்றம் title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. புத்தாண்டில் மத்திய மோடி அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய ஊழியர்களுக்கு இரண்டு பெரிய பரிசுகளை வழங்கக்கூடும். மக்களவை தேர்தலுக்கு முன், மோடி அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை மீண்டும் 4 சதவீதம் உயர்த்தலாம் என்றும், இதனுடன், ஃபிட்மென்ட் ஃபாக்டரும் அதிகரிகப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நடந்தால், 2024 முதல் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) ஓய்வூதியத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும்.

புதிய ஆண்டில் அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கும்

மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் DA/DR விகிதங்களை ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்துகிறது. இது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. ஜூலை முதல் அக்டோபர் வரை வெளியிடப்பட்ட AICPI குறியீட்டு தரவுகளுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை 138.4 ஐ எட்டியுள்ளது, மேலும் டிஏ (DA) மதிப்பெண் 49% க்கு அருகில் உள்ளது. 
இருப்பினும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் புதிய ஆண்டில் அகவிலைப்படியில் (Dearness Allowance) நல்ல அதிகரிப்பு இருக்கும் என நம்பப்படுகிறது. டிஏ 4 முதல் 5% அதிகரிக்கலாம். உயர்த்தப்பட்ட டிஏ ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும், இது பட்ஜெட் கூட்டத் தொடர் அல்லது ஹோலி பண்டிகையின் போது அறிவிக்கப்படலாம்.

அகவிலைப்படி 46%லிருந்து 50% ஆக அதிகரிக்கலாம்

தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் 46% டிஏ -வைப் பெற்று வருகிறார்கள். இது ஜூலை முதல் டிசம்பர் 2023 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த டிஏ ஜனவரி 2024 முதல் நடைமுறைப்படுத்தப்படும், இது ஹோலியை ஒட்டி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விகிதங்களுக்குப் பிறகு டிஏ 50 சதவிகிதம் அல்லது 51 சதவிகிதத்தை எட்டினால், ஊழியர்களின் சம்பளம் திருத்தப்படும். ஏனெனில் 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி, மத்திய அரசு டிஏ மறுசீரமைப்பு விதிகளை முடிவு செய்தது.

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி அகவிலைப்படி 50% -ஐ எட்டினால், அகவிலைப்படி 0% ஆக்கப்பட்டு 50% அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அந்த நிலையில், ஊதிய திருத்தம் இருக்கும். ஊதிய திருத்தம் ஏற்பட அடுத்த ஊதியக் கமிஷனை உருவாக்க வேண்டியது அவசியமாகும். 

ஃபிட்மென்ட் காரணி 2.57 -இல் இருந்து 3.68 சதவிகிதமாக அதிகரிக்கலாம்

2024-25 பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு ஃபிட்மெட் ஃபாக்டர் குறித்து ஒரு பெரிய முடிவை எடுக்கக்கூடும் என சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 சதவீதத்தில் இருந்து 3.00 அல்லது 3.68 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது நடந்தால் அடிப்படை சம்பளம் ரூ.8000 அதிகரிக்கும், அதாவது அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18000 -இல் இருந்து ரூ.26000 ஆக உயரும். ஆனால், இதுவரை இது அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் படிக்க | EPF சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனிமேல் முன்பணம் எடுக்க தடை! காரணம் என்ன?

முன்னதாக, மத்திய அரசு, 2016ல், ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்தி, அதே ஆண்டு முதல், 7வது ஊதியக் குழுவையும் அமல்படுத்தியது. அதன் பின், ஊழியர்களின் அடிப்படை சம்பளம், 6,000 ரூபாய் உயர்ந்து ரூ.18,000 ஆனது. இப்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரித்தால் சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும்.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன?

மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 7 வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் பே மேட்ரிக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஒரு பொதுவான மதிப்பு, இது ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தால் பெருக்கப்படுகிறது, மேலும் இதிலிருந்து அவர்களின் சம்பளம் கணக்கிடப்படுகிறது.

சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயரும்

இது சம்பளத்தை இரண்டரை மடங்குக்கு மேல் அதிகரிக்கிறது. உதாரணமாக, ஒரு மத்திய ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 எனில், அலவன்ஸ்கள் தவிர்த்து அவருடைய சம்பளம் 18,000 X 2.57= 46,260 ஆக இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 ஆனால், சம்பளம் 95,680 (26000 X 3.68 = 95,680) ஆக அதிகரிக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆனால்,  ஊழியர்களின் சம்பளம் ரூ 21000 X 3 = ரூ 63,000 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | SIP Calculator: தினமும் ரூ.100 சேமித்து ரூ. 4 கோடிக்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News