7th Pay Commission: விரைவில் சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஏற்றம்

7th Pay Commission: 2023 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் செய்தி கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஓராண்டு கால ஆசைகள் நிறைவேறுவுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 25, 2022, 10:36 AM IST
  • ஃபிட்மென்ட் ஃபேக்டரில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்? எதிர்பார்ப்பு என்ன?
  • ஊதியம் எவ்வளவு உயரும்?
  • இதன் கணக்கீடு என்ன?
7th Pay Commission: விரைவில் சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஏற்றம் title=

ஃபிட்மென்ட் ஃபேக்டர் அப்டேட்: புதிய ஆண்டு தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் செய்தி கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஓராண்டு கால ஆசைகள் நிறைவேறுவுள்ளன. ஃபிட்மென்ட் பேக்டர் தொடர்பான பணிகள் நடந்து வருவதாக எமது இணை இணையதளமான ஜீ பிசினஸ்ஸின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. இது குறித்த முடிவு 2023 இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரும் சம்பள உயர்வு அடிப்படை ஊதியத்தின் மட்டத்தில் இருக்கும்.

ஃபிட்மென்ட் ஃபேக்டரில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்? எதிர்பார்ப்பு என்ன? 

செப்டம்பரில் ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இது மேலும் அதிகரிக்கப்படும். எனினும், ஏழாவது ஊதியக் குழுவின் படி, ஃபிட்மென்ட் ஃபேக்டரை அதிகரிக்க வேண்டும் என, மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மக்களவை தேர்தலுக்கு முன், 2023ல், இந்த கோரிக்கை தொடர்பான விஷயத்தை இறுதி செய்ய, அரசு பரிசீலித்து வருவதாக, வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது, ​​2.57 மடங்குடன் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. இதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த எண்களில் ஒரு சமரசத்தை செய்து அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை மூன்று மடங்காக உயர்த்தக்கூடும் என்று செய்தி உள்ளது.

மேலும் படிக்க | 7th pay commission: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட் 

ஊதியம் எவ்வளவு உயரும்?

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 மடங்கு ஆனாலும் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும். உதாரணமாக, அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாக இருக்கும் ஊழியர்களுக்கு, தற்போது ஊதியம் 18,000 X 2.57 = 46,260 ஆக இருக்கும். எனினும், ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூன்று மடங்காக அதிகரிக்கும் போது அடிப்படை சம்பளம் ரூ.21,000 ஆக அதிகரிக்கும். அப்போது கொடுப்பனவுகள் தவிர மொத்த சம்பளம் 21000X3 அதாவது ரூ.63,000 ஆகும்.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள பொதுவான கொடுப்பனவுகளைத் தவிர மற்ற அலவன்ஸ்களும் உள்ளன. சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையும் (கிராஜுவிட்டி) அடங்கும். மத்திய ஊழியர்களின் இபிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஊழியர்களின் இபிஎஃப் மற்றும் கிராச்சுட்டியைக் கணக்கிடுவதற்கு வேறு சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. கொடுப்பனவுகள் மற்றும் பிற விலக்குகள் சிடிசி- இலிருந்து செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு புத்தாண்டில் எக்கச்சக்க பரிசுகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

 

Trending News