PPF திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களா... அப்போது இந்த வேலையையும் மறக்காதீங்க!

PPF Scheme: PPF கணக்கை வைத்திருப்பவர்கள் நாமினியின் பெயரை சேர்க்கவில்லை என்றால், தற்போது இந்த வேலையைச் செய்வது மிகவும் முக்கியமாகும்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 13, 2023, 03:09 PM IST
  • PPF கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள்.
  • இது அரசால் ஆதிரிக்கப்படும் நீண்டகால முதலீடு திட்டம்.
  • இதற்கான வட்டி விகிதம் 7.1 ஆக உள்ளது.
PPF திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களா... அப்போது இந்த வேலையையும் மறக்காதீங்க! title=

PPF Scheme: முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. முதலீட்டின் மூலம் மக்கள் தங்கள் பணத்தை அதிகரிக்க முடியும். அதே நேரத்தில், நாட்டில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மூலமாகவும் மக்கள் முதலீடு செய்யலாம். PPF கணக்கை ஒரு பெயரில் மட்டுமே திறக்க முடியும்.

எனவே வங்கி அல்லது தபால் அலுவலகம் கணக்கைத் திறக்கும் போது நாமினியின் பெயரை உங்களிடம் கேட்டிருப்பார்கள். இருப்பினும், PPF கணக்கைத் திறக்கும் போது, நீங்கள் நாமினியின் பெயரை கணக்கில் சேர்க்கவில்லை என்றால், அதை நீங்கள் பின்னர் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் PPF கணக்கில் முதலீடு செய்தால், இந்த வேலையைச் செய்வது மிகவும் முக்கியமாகும். 

PPF கணக்கில் உங்கள் மனைவி அல்லது வேறு யாரேனும் குடும்ப உறுப்பினரின் பெயரைச் சேர்க்க விரும்பினால், தேவையான படிவத்தைப் பூர்த்தி செய்து, அதில் கையொப்பமிட்டு, உங்கள் PPF கணக்கு பதிவுசெய்யப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் அவ்வாறு செய்யலாம். இந்த சூழ்நிலையில் நீங்கள் கணக்கு தொடங்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் EPF கணக்கில் வரியில்லா வட்டி கிடைக்குமா?

மறுபுறம், பிபிஎஃப் கணக்கில் பல நாமினிகள் இருந்தால், யார் எவ்வளவு பங்கை வழங்க வேண்டும் என்பது பற்றிய தகவலை நீங்கள் வழங்கலாம். இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், ஒவ்வொரு நாமினியும் அந்தத் தொகையைப் பெறலாம். ஆரம்ப கட்டமாக PPF கணக்கு தொடங்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்திலிருந்து படிவம் 'F' பெறப்பட வேண்டும். துல்லியமான தகவலுடன் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்தில் சமர்ப்பிக்கவும். படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு நாமினியை மாற்றலாம்.

PPF திட்டம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை நாமினி ஆக்கும் வசதியை வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், சிறு கணக்கின் விஷயத்தில் நியமனம் சாத்தியமில்லை. மறுபுறம், ஒரு புதிய நாமினி சேர்க்கப்பட்டால், முந்தைய நாமினியிலும் மாற்றம் இருக்கலாம்.

PPF திட்டமானது அரசால் ஆதரிக்கப்படும் நீண்ட கால முதலீட்டு விருப்பமாக உள்ளது. அதன் பாதுகாப்பு மற்றும் கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளுக்காக இந்த திட்டம், பலருக்கும் முதலீடு செய்ய ஏதுவான திட்டமாக பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சகத்தால் காலாண்டு மதிப்பாய்வு செய்யப்படும் இந்த திட்டத்தின் வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீதமாக இருக்கிறது. 

ஒரு PPF கணக்கின் காலம் 15 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர், இதனை ஐந்து வருடங்களுக்கு மேலும் நீட்டிக்கச் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இது EEE அம்சத்தின் கீழ் செயல்படுகிறது. EEE வரி நிலை என்பது முதலீட்டின் போது (ஆரம்ப பங்களிப்பு), வருமானம் குவிப்பு கட்டத்தின் போது (வருமானங்கள் அல்லது சம்பாதித்த வட்டி) மற்றும் திரும்பப் பெறும் நேரத்தில் (முதிர்வு அல்லது மீட்பு) இந்த முதலீட்டை, வரிகளில் இருந்து முழு விலக்கு அளிக்கிறது. அதாவது, இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது, அதில் இருந்து வட்டியை பெறும்போதும், திட்டம் முதிர்வு அடைந்து மொத்தமாக பணத்தை எடுக்கும்போதும் முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | பம்பர் செய்தி!! PPF கணக்கில் இனி இரட்டை வட்டி கிடைக்கும்.. விதிகளை மாற்றியது அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News