Hair fall பிரச்சனையா? வாழ்த்துக்கள்!! நீங்க லட்சாதிபதியாகப் போறீங்க!!

உங்கள் தலையில் அலையாய் அசையும் கூந்தல் உங்களுக்கு ஆயிரம் ரசிகர்களைப் பெற்று தரும் என்றால், தலையிலிருந்து உதிரும் கூந்தல் உங்களுக்கு லட்சத்தைப் பெற்று தரும்!! இந்த விஷயத்தை மக்கள் இப்போது புரிந்துகொள்ளத் துவங்கியுள்ளார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2020, 03:18 PM IST
  • உதிர்ந்த கூந்தலின் வணிகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
  • மிகவும் பயனற்ற பொருளாகக் கருதப்படும் கூந்தல், வர்த்தக வழிமுறையாக மாறியுள்ளது.
  • தலையிலிருந்து உதிர்ந்த கூந்தலை டிரான்ஸ்பிளாண்ட் செய்வதோ அல்லது அதை வைத்து விக் செய்வதோ மிக எளிது.
Hair fall பிரச்சனையா? வாழ்த்துக்கள்!! நீங்க லட்சாதிபதியாகப் போறீங்க!! title=

உங்கள் தலையில் அலையாய் அசையும் கூந்தல் (Hair) உங்களுக்கு ஆயிரம் ரசிகர்களைப் பெற்று தரும் என்றால், தலையிலிருந்து உதிரும் கூந்தல் உங்களுக்கு லட்சத்தைப் பெற்று தரும்!! இந்த விஷயத்தை மக்கள் இப்போது புரிந்துகொள்ளத் துவங்கியுள்ளார்கள். இப்போது உதிர்ந்த கூந்தலை (Broken Hair) வாங்க வணிகர்கள் கிராமம் கிராமமாக வீடு வீடாக செல்கிறார்கள்.

கொல்கத்தா (Kolkata) மற்றும் சென்னையில் (Chennai) இந்த கூந்தலுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இப்படி சேகரிக்கப்பட்ட உதிர்ந்த கூந்தல், பதப்படுத்தப்பட்டு தேவையான வகையில் தயார் செய்யப்பட்டு சீனாவுக்கு அனுப்பப்படுகின்றது.  

வர்த்தகர்களின் கூற்றுப்படி, நாடு முழுவதும் பரவியுள்ள இந்த உதிர்ந்த கூந்தலின் வணிக அளவு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

தாஜ்மகலின் நகரமான ஆக்ராவில் (Agra), ‘கிலோ 2000 ரூபாய்’ என கத்திக்கொண்டு உதிர்ந்த கூந்தலை பெற ஊர் ஊராகச் செல்லும் நபர்ளை இந்த நாட்களில் அதிகமாகக் காண முடிகிறது.

உதிர்ந்த கூந்தலின் வணிகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. ராம்பாக்கில் வீடுகளிலிருந்து உதிர்ந்த கூந்தலை பெறும் சந்தோஷ், தான் இரண்டு ஆண்டுகளாக இந்த வேலையைச் செய்து வருவதாகக் கூறினார்.

‘ஆரம்பத்தில், உதிர்ந்த கூந்தலுக்கும் பணம் கிடைக்கும் என்பதை மக்கள் நம்பவில்லை. முதல் நாளில், ஒன்று அல்லது இரண்டு இடங்களிலிருந்துதான் கூந்தல் கிடைத்தது. இருப்பினும், படிப்படியாக பெண்கள் உதிர்ந்த கூந்தலை (Broken Hair) சேகரிக்கத் தொடங்கினர். இப்போது ஏராளமான பெண்கள் முடியை விற்கிறார்கள்.’ என்று அவர் கூறினார்.

இதில் சில நிபந்தனைகளும் உள்ளன. கூந்தல் வெட்டபட்டிருக்கக்கூடாது. சீப்பால் நன்றாக சீர் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் நீளம் 8 அங்குலங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

மிகவும் பயனற்ற பொருளாகக் கருதப்படும் கூந்தல், வர்த்தக வழிமுறையாக மாறியது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பையும் அளித்து வருகிறது. அதே நேரத்தில், தங்களது உதிர்ந்த கூந்தலுக்கும் (Broken Hair)  பெண்கள் ஒரு விலையை பெறுகிறார்கள்.

ALSO READ: இளநரைக்கும் இதய நோய்க்கும் தொடர்புண்டா? ‘ஆம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!!

ஒரு வாரத்தில் 200 கிராம் கூந்தல் சேகரிக்கப்படுகிறது

ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதாகவும், அப்படி செல்லும் போது, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சுமார் 200 கிராம் உதிர்ந்த கூந்தல் (Broken Hair)  சேகரிக்கப்படுவதாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள் கூறுகிறார்கள். ஒரு நாளில், அவர்கள் நகரின் 15 முதல் 20 பகுதிகளை இதற்காக சுற்றி வருகிறார்கள்.

இதன் விலை ஒரு கிலோ 2000 ரூபாய்

இந்தத் தொழிலில் இருக்கும் சந்தோஷ், தான் ஒரு கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற அளவில் கூந்தலைப் பெறுவதாகக் கூறினார். அவர் இதை பின்னர் பெரிய வணிகர்களுக்கு விற்கிறார். இந்த பெரிய வணிகர்கள் இதை கொல்கத்தா மற்றும் ஆந்திராவில் விற்கிறார்கள்.

சீப்பைக் கொண்டு வாரும் போது தலையிலிருந்து உதிர்ந்த கூந்தலை டிரான்ஸ்பிளாண்ட் (Hair Transplant) செய்வதோ அல்லது அதை வைத்து விக் (Wig) செய்வதோ மிக எளிது. உதிர்ந்த கூந்தலுக்கான வணிகம் துவங்க இதுவே காரணமாகும். இந்த கூந்தல் சுத்தம் செய்யப்பட்டு ஒரு வகையான ரசாயனத்தில் வைக்கப்படுகின்றன. பின்னர் இவை பயன்படுத்தப்படுகின்றன.

ALSO READ: ஆரோக்கியமான உணவு என்று குழப்பமா? சரியான தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News