வங்கிகள் பொதுவாக தனது வாடிக்கையாளர்களின் நகைகள், எஃப்டி பேப்பர்கள் போன்ற சொத்துக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துகொள்ள லாக்கர்களை வழங்குகிறது. அடிக்கடி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக பல விதிகளை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது லாக்கருக்கான சில விதிகளையும் வெளியிட்டுள்ளது. ஜனவரி 1, 2023 முதல் வங்கிகளில் லாக்கர் விதிகள் மாறப் போகிறது, வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். லாக்கர் ஒப்பந்தம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, புதிய லாக்கர் ஒப்பந்தம் டிசம்பர் 31, 2022 க்கு முன் செயல்படுத்தப்படும், இதனை செய்யாதவர்கள் உடனடியாக செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க | ஆதார் கார்டு வைத்திருந்தால் மாதம் ரூ.3000 கிடைக்குமா?
வங்கிகளில் லாக்கரை பயன்படுத்துபவர்கள் ஜனவரி 1, 2023க்கு முன் புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியுள்ளபடி, வங்கிகள் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களில் ஏதேனும் நியாயமற்ற விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும். ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வணிகத்தின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும். மேலும் வங்கிகள் 2023 ஜனவரி 1-ம் தேதிக்குள் லாக்கர் வாடிக்கையாளர்களுடன் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பொதுவாக வங்கிகள் ஒரு வாடிக்கையாளருக்கு லாக்கரை வழங்கும்போது, அந்த வாடிக்கையாளருடன் முத்திரைத் தாளில் ஒப்பந்தம் செய்து கொள்கின்றது. அந்த கையெழுத்து போடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல் லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் அசல் பாத்திரம் லாக்கர் உள்ள அந்த குறிப்பிட்ட வங்கிக் கிளையில் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அப்டேட், எப்போது அறிவிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ