Union Budget 2024 Expectations: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மோடி அரசின் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2024 அன்று (Union Budget 2024) தாக்கல் செய். இந்த பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்பு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய வரி விதிப்பில் அரசு வரிவிலக்கு அளிக்கலாம் என ஒரு அறிக்கை கூறுகிறது. இந்த விலக்கு பழைய வரி முறையின் கீழ் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவு தொடர்பாக இருக்கலாம். வரி அடுக்குகளில் (Tax Slabs) மாற்றங்கள் அல்லது நிலையான விலக்குகளை (Standard Deduction) அதிகரிப்பதன் மூலம் மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்கும் சாத்தியம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பட்ஜெட்டில் வெளியிடும் சில அறிவிப்புகள் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் இருக்கும் எனவும் பெண்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் வெளியான அறிக்கையின்படி, வரவிருக்கும் பட்ஜெட்டில் (Budget 2024) , பழைய வருமான வரி முறையில், குறைந்தபட்ச வரி விலக்கு வரம்ப அதிகரிக்கப்படலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய வரி விலக்கில், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு வருமான வரி விலக்கு அளவை சுமார் ரூ.7 லட்சமாக அதிகரித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் குறித்து நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
நேரடி வரி முறையில் சீர்திருத்த அறிவிப்புடன் புதிய சலுகைகள் அரசின் நிதிப்பற்றாக்குறை புள்ளிவிவரங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இருப்பினும், பிப்ரவரியில் இடம் பெறவுள்ள இடைக்கால பட்ஜெட் திட்டத்தில் எந்தவொரு விசேஷமான அறிவிப்பும் இடம்பெற முடியாது என நிதியமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை கவரும் வண்ணம் சில அறிவிப்புகளை அரசு வெளியிடலாம் என வட்டாரங்கள் கூறுகின்றன. பணவீக்கத்தைக் குறைக்கவும், கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் நுகர்வை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி தொடர்பாக முன்னதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளில், வரி செலுத்துவோருக்கு வருமான வரி தொடர்பான பல விதிகளை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் ரூ.7 லட்சம் வரையிலான வரி விலக்கு மற்றும் புதிய வரி முறையின் கீழ் பிற விதிகள் அடங்கும். கடந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர விவசாயிகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய வரி முறையின் கீழ் உள்ள மொத்த வரி விலக்கு
FY24 பட்ஜெட்டில், நிதியமைச்சர் பெரிய மாற்றங்களைச் செய்து, புதிய இயல்புநிலை விருப்பமாக புதிய வரி முறையை அறிமுகப்படுத்தினார். பழைய வரி விதிப்பின் கீழ் ரூ. 5 லட்சமாக இருந்த வரிவிலக்கு, புதிய வரி முறையில் ரூ. 7 லட்சம் வரையிலான மொத்த வரி விலக்கு சலுகை உட்பட, புதிய வரி முறைக்கு மாற ஊக்குவிக்கும் சலுகைகளை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கறீங்களா... ‘இந்த’ கட்டணங்கள் குறித்து எச்சரிக்கையா இருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ