PMGKAY: கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் தொடங்கிய உலகளாவிய பிரச்சனைகளின்போது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. பொதுமக்களின் அடிப்படைத் தேவையான உணவு பாதுகாப்புக்காக, தொடங்கப்பட்டஅரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டமானது, ஏழை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்குகிறது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பலன்
தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31, 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். விதவைகள், ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் போன்ற பலதரப்பு மக்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தில் பலன்களைப் பெற, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்க ஜூன் 30 கடைசி தேதியாக இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ளது.
ஆதார் மற்றும் ரேஷன் கார்டை இணைப்பதன் அவசியம்
'ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு' என அரசாங்கம் அறிவித்ததிலிருந்து, ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்து பல்வேறு இடங்களில் இருந்து இலவச ரேஷன் கார்டுகளை பயன்படுத்தும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஒருவர் இறந்த பிறகும், அவர்களின் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வேறு யாரோ பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். இதனைத் தடுக்க, ஆதார் உடன் ரேஷன் அட்டையை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
ரேஷன் கார்டுகள் மூலம், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள பிபிஎல் குடும்பங்களுக்கு மலிவு விலையில் தானியங்கள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்குகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்துள்ள பயனாளிகளினால் தேவையானவர்களுக்கு கிடைப்பதில் பிரசனை ஏற்படுகிறது.
தேதி நீட்டிப்பு
ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க முயற்சித்து வரும் மத்திய அரசு, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பதற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்துள்ளது. தற்போது மீண்டும் செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் விநியோகம்
முன்னதாக, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி 2024 ஜூன் 30 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய தேதிக்குள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கப்படாவிட்டால், ஜூலை 1 முதல் பயனாளிகளுக்கு மலிவான ரேஷன் மற்றும் இலவச ரேஷன் பலன் கிடைக்காது என்று ஊடக அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கடைசி தேதியைசெப்டம்பர் 30 ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளதால், தகுதியான பயனாளிகள் தொடர்ந்து ரேஷன் பொருட்களை வாங்கலாம்.
மேலும் படிக்க | 432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ