Budget 2024: இன்னும் சில நாட்களில் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை ஜூலை 23 அன்று தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. பாஜக தலைமையிலான எண்டிஏ ஆட்சியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது. ஆகையால், இந்த பட்ஜெட்டில் அனைவருக்கும் ஏதாவது ஒரு நல்ல செய்தி கண்டிப்பாக இருக்கும் என கூறப்படுகின்றது.
Union Budget 2024: பல்வேறு கோரிக்கைகள்
விவசாயிகள், பெண்கள், தொழில்துறையினர், மூத்த குடிமக்கள், மத்திய அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்க மக்கள், மாணவர்கள், வரி செலுத்துவோர் என பல வகையான மக்கள் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். இந்த நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து நிதி அமைச்சருக்கு (Finance Minister) பல்வேறு கோரிக்கைகளும் வந்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள் சார்பிலும் பல வித கோரிக்கைகள் நிதி அமைச்சகத்திற்கு கிடைத்துள்ளன. இவற்றில் பல கோரிக்கைகள் வெகு நாட்களாக ஊழியர் சங்கங்கள் சார்பில் வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள். இந்த பட்ஜெட்டிலாவது அரசு இவற்றுக்கான அறிவிப்புகளை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்கள் உள்ளனர். மத்திய அரசு ஊழியர் சங்கம், 7 கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவை அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளில் சிலவற்றை பற்றி இங்கே காணலாம்.
1. 8வது ஊதியக் குழு:
8வது ஊதியக்குழுவை (8th Pay Commission) விரைவில் அமைத்து அதை அமலில் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. அந்த வகையில் பார்த்தால் தற்போது 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வெளிவந்து பணிகள் தொடங்கினால், 2026 ஆம் ஆண்டிற்குள் இது அமலுக்கு வரும். 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
2. பழைய ஓய்வூதியத் திட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கைகள் இருந்து வருகின்றன. ஆனால், மத்திய அரசு தேசிய ஓய்வூதிய முறையில் (National Pension System) மாற்றங்களை செய்ய ஒரு குழுவை அமைத்து, அக்குழு தனது பரிந்துரைகளையும் சமர்ப்பித்துள்ளது. இதன் கீழ், தேசிய ஓய்வூதிய அமைப்பில் பல நன்மைகளை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மத்திய அரசு உழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: மாத சம்பளத்தில் மகத்தான ஏற்றம்
3. டிஏ அரியர் தொகை
கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படியின் அரியர் தொகை (DA Arrears) பற்றி இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்து, 18 மாத கால அகவிலைப்படி அரியர் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
4. கருணை நியமனங்கள்
கம்பேஷனேட், அதாவது கருணை நியமனங்கள் மீதான 5 சதவீத உச்சவரம்பை நீக்கவும், இறந்த பணியாளரின் அனைத்து குழந்தைகள் / சார்ந்திருப்பவர்களுக்கு கருணை நியமனம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5. காலி பணியிடங்கள்
அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் ஊழியர்கள் சார்பில் கோரிக்கை உள்ளது.
6.ஊழியர்கள் கோரிக்கை
ஜேசிஎம் அமைப்பின் விதிகளின்படி சங்கங்கள் / கூட்டமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
7.ஒப்பந்தத் தொழிலாளர்கள்
கேஷுவல், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் ஜிடிஎஸ் ஊழியர்களை முழுநேர நியமனம் வழங்கி முறைப்படுத்துதல், அடானமஸ் அதாவது தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு சிஜி ஊழியர்களுக்கு சமமான அந்தஸ்து வழங்குதல் ஆகிய கோரிக்கைகளு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | PAN Card எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும்? இதன் எக்ஸ்பைரி டேட் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ