Empowerment: கிராமப்புற இந்தியர்களை CEOக்களாக ஆக்குங்கள் - சத்குரு கோரிக்கை

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் மக்களின் இடம்பெயர்வது அதிகரிப்பது என்பதன் அடிப்படையில் நீண்டகால சவால்கள் ஏற்பட்டுள்ளன. எனவே மக்கள் இருக்கும் இடத்திற்கு தொழில்கள்  செல்ல வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கேட்டுக்க்கொண்டார்

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 14, 2021, 02:23 PM IST
  • கிராமப்புற இந்தியர்களை CEOக்களாக ஆக்குங்கள் - சத்குரு கோரிக்கை
  • கிராமப்புற இந்தியாவில் வணிகங்கள் பரவுவது முக்கியமானது
  • நிறுவனங்களுக்கு புதுமைகளுக்கு நிறைய இடம் இருக்கும்.
Empowerment: கிராமப்புற இந்தியர்களை CEOக்களாக ஆக்குங்கள் - சத்குரு கோரிக்கை

தொழில்கள் மக்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கேட்டுக்க்கொண்டார்.   தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் மக்களின் இடம்பெயர்வது அதிகரிப்பது என்பதன் அடிப்படையில் நீண்டகால சவால்களின் பின்னணியில் சத்குரு இதனைத் தெரிவித்தார். நகர்ப்புற ஏழை மற்றும் குடிசைவாசிகள் இந்த தொற்றுநோய் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈஷாவின் ‘மனிதர் ஒரு வளமல்ல’ (Human is Not a Resource) என்ற மெய்நிகர் நிகழ்வில் உரையாற்றிய சத்குரு, உலக முதலீட்டில் பெரும் பங்கு உலகெங்கிலும் உள்ள 25 முதல் 30 முக்கிய நகரங்களில் குவிந்துள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த போக்கைப் பற்றிக் குறிப்ட்ட சத்குரு, உலகெங்கிலும் 1.6 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாய்ப்புகளைத் தேடி நகரங்களுக்கு குடிபெயர (migrate) வேண்டியிருக்கும் என்று கூறினார்.

இதற்கு ஒரு தீர்வாக, இந்தியாவில் வணிகங்கள் கிராமப்புற த்தில் வசிப்பவர்களின் திறனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். "கிராமப்புற இந்தியாவில் வணிகங்கள் பரவுவது மிகவும் முக்கியமானது. உங்கள் நிறுவனத்திற்கு புதுமைகளுக்கு நிறைய இடம் இருக்கும். மக்கள் இருக்கும் இடங்களை நோக்கி வணிகங்கள் செல்ல வேண்டும்” என்றும்,  நிறுவனங்கள் குறைந்தது 10% முதல் 15% வரை கிராமப்புறங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவ தொழில் நிறுவனங்களை வலியுறுத்திய சத்குரு, மனித ஆற்றலின் விதைகளை விதைப்பதற்கு தொழில்களுக்கு இது ஒரு வாய்ப்பு என்று கூறினார். மக்களில் மிகச் சிறந்ததை வெளிக்கொணர்வதற்காக, "எல்லா மனித நடவடிக்கைகளுக்கும் மனிதகுலத்தை இணைப்பது" (attach humanity to all human activity) முக்கியம் என்று அவர் கூறினார்.

உயிரைக் காப்பாற்றுவதற்கும், தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கை முறைக்கும் இடையிலான போரில், வாழ்க்கை வெல்ல வேண்டும் என்று கூறினார். கோவிட் -19 காரணமாக உலகளவில் 3.7 மில்லியனுக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதை சத்குரு சுட்டிக்காட்டினார்.

Also Read | குறைந்த வருமானம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச ரேஷன்; அசத்தும் IDFC FIRST வங்கி

ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதன் சொந்த சவால்களை எதிர்கொண்டது என்பது, அது மேலும் வலுவாக உயர்வதற்குக் மட்டுமே என்பதையும் சத்குரு எடுத்துரைத்தார்.

HINAR திட்டத்தில் 11 நாடுகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துக் கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் தென்மேற்கு கட்டளைத் தளபதியின் முன்னாள் பொது அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அலோக் கிளெர், இண்டிகோவின் மனிதவளத் துறையின் மூத்த துணைத் தலைவர் ராஜ் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Human is NOT a Resource (HINAR) என்பது ஈஷா லீடர்ஷிப் அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திரத் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் COVID-19 ஆல் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் இஷா கோவிட் ஆக்ஷன் (Isha COVID Action) திட்டத்திற்கு வழங்கப்படும்.  

Also Read | கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை தத்தெடுத்த ஈஷா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News