EPFO சூப்பர் செய்தி: சுகாதாரம், மகப்பேறு ஆகிய துறைகளில் விரைவில் விரிவாக்கம்

EPFO: இபிஎஃப்ஓ-வின் 4.5 கோடி உறுப்பினர்களில், 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த திட்டங்களின் அறிமுகம் மூலம் அவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 20, 2022, 12:54 PM IST
  • பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) இப்போது அதன் திட்ட விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது.
  • இது குறித்த ஏற்பாடுகள் ஆரம்ப நிலையில் உள்ளன.
  • அடுத்த சில மாதங்களில் இந்த யோசனைக்கான பணிகள் முடிவடையும்.
EPFO சூப்பர் செய்தி: சுகாதாரம், மகப்பேறு ஆகிய துறைகளில் விரைவில் விரிவாக்கம்  title=

EPFO: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) இப்போது அதன் திட்ட விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு உடல்நலம், ஓய்வூதியம், மகப்பேறு மற்றும் உடல் ஊனம் அல்லது இயலாமை தொடர்பான பலன்களை இபிஎஃப்ஓ அமைப்பு வழங்கக்கூடும். இபிஎஃப்ஓ அமைப்பு அடிப்படை சமூகப் பாதுகாப்புத் துறையில் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது என்றும் இபிஎஃப்ஓ அடிப்படை சமூகப் பாதுகாப்புத் தளத்தின் (SPF) சரியான மேலாளராக முடியும் என்றும் இபிஎஃப்ஓ அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

இது குறித்த ஏற்பாடுகள் ஆரம்ப நிலையில் உள்ளன

இது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இபிஎஃப்ஓ-வின் திட்டங்களின் விரிவாக்கம் குறித்த பூர்வாங்க விவாதங்கள் நடந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. SPF என்பது தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட அடிப்படை சமூக பாதுகாப்பு உத்தரவாதங்களின் தொகுப்பாகும். இது வறுமை, மக்களுக்கு ஏற்படும் பலதரப்பட்ட பாதிப்புகள் மற்றும் சமூக விலக்கலைத் தடுக்கும் அல்லது குறைக்கும் நோக்கத்துடன் பாதுகாப்பான வழிமுறைகளை வழங்குவதை உறுதி செய்கிறது. கூடுதலாக, அத்தியாவசிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வருமான பாதுகாப்புக்கான அணுகல் பற்றிய கருத்துகளும் இதில் அடங்கும். 

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்! ரூ.8 லட்சம் வரை அதிகரிப்பு!

என்னென்ன முன்மொழிவுகள் பரிசீலனையில் உள்ளன 

வருங்கால வைப்பு நிதி-யைத் தவிர, இபிஎஃப்ஓ ​​அதன் உறுப்பினர்களுக்கு சமூகப் பாதுகாப்பு தொடர்பான மேலும் சில திட்டங்களை வழங்க முனைகிறது. இவற்றில், ஊனமுற்ற உறுப்பினர்களுக்கான உதவி, பெண்களுக்கான மகப்பேறு சலுகைகள் என பல திட்டங்கள் அடங்கும். இபிஎஃப்ஓ அமைப்பு சுகாதார நலன்களுக்கான புதிய பரிமாணங்களையும் பரிசீலித்து வருகிறது.

அடுத்த சில மாதங்களில் இந்த யோசனைக்கான பணிகள் முடிவடையும்

இபிஎஃப்ஓ தற்போது அதன் சுமார் 4.5 கோடி உறுப்பினர்களுக்கு இந்த நன்மைகளை கொண்டு வரும் முழு முனைப்போடு உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இபிஎஃப்ஓ-வின் 4.5 கோடி உறுப்பினர்களில், 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த திட்டங்களின் அறிமுகம் மூலம் அவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யோசனைக்கான உறுதியான பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும்.

மேலும் படிக்க | உயர்கிறது ஊழியர்களின் ஓய்வு வயது! இந்த தேதியில் இருந்து அமலுக்கு வரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News