இபிஎஃப்ஓ அதன் கணக்குதாரர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியினை வழங்கவுள்ளது, அதாவது இபிஎஃப்ஓ இப்போது அதன் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின்படி, இபிஎஃப்ஓ-வில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிஎஃப் கணக்கிலிருந்து எல்ஐசியின் பிரீமியத்தை செலுத்தும் வசதியை இபிஎஃப்ஓ வழங்கியுள்ளது, இது அதன் கணக்குதாரர்களுக்கு நன்மையை வழங்கும் விதமாக அமைந்துள்ளது. கொரோனா தொற்று சமயத்திலிருந்து பலரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர், அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இபிஎஃப்ஓ அதன் விதிகளில் செய்துள்ள மாற்றம் பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஓய்வூதியத்தில் அகவிலை நிவாரண தொகையை கணக்கிடுவது எப்படி?
அதேசமயம் பிஎஃப் கணக்கிலிருந்து எல்ஐசி-க்கு பணம் எடுக்க இபிஎஃப்ஓ சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது, அந்த நிபந்தனைகளை நாம் பின்பற்றினால் தான் பணத்தை எல்ஐசி-க்கு மாற்ற முடியும். முதல் நிபந்தனை என்னவென்றால் இபிஎஃப்ஓ-ன் படிவம் 14-ஐ சமர்ப்பிக்க வேண்டும், படிவத்தை சமர்ப்பித்த பிறகு எல்ஐசியின் பாலிசி மற்றும் இபிஎஃப்ஓ கணக்கு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இவ்வாறு கணக்கு இணைக்கப்பட்ட பின்னர் கணக்கு வைத்திருப்பவரால் எல்ஐசியின் பிரீமியத்தை செலுத்த முடியும்.
இரண்டாவது நிபந்தனை என்னவென்றால், இபிஎஃப்ஓ-ன் படிவம் 14 ஐ நிரப்பும்போது உங்கள் கணக்கில் குறைந்தது இரண்டு மாத பிரீமியம் தொகை இருப்பது அவசியமானதாகும். அடுத்ததாக மூன்றாவது நிபந்தனை என்னவென்றால், எல்ஐசியின் பாலிசிக்காக மட்டுமே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இபிஎஃப்ஓஇந்த வசதியை வழங்கியுள்ளது, அதேசமயம் இந்த வசதி மற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை. கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு எந்த பாலிசியிலும் இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை டெபாசிட் செய்ய முடியாது. மேலும் எந்தவொரு ஆவணங்களையும் வழங்காமல் பிஎஃப் கணக்கிலிருந்து நீங்கள் ரூ.1 லட்சம் வரை எடுத்துக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: இந்த தேதியில் இருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ