Calculation Of Provident Fund: EPFO-ன் விதி என்னவென்றால், தொடர்ந்து 10 ஆண்டுகள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால், நீங்கள் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர். ஆனால், தனியார் நிறுவனத்தின் வேலை செய்பவர்கள் அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருக்க நேரிடும். மேலும், ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், அவர்கள் வேலையை இழக்க நேரிடும். அடுத்த வேலை கிடைப்பதற்கும் நீண்ட காலம் எடுக்கும். இப்படிப்பட்ட நிலையில், முந்தைய நிறுவனத்தில் அவருக்கு பிடித்தம் செய்த பிஎஃப் தொகை என்னவாகும்?, கிடைத்தால் அது எப்படி கிடைக்கும்? பிஎஃப் தொகை கிடைத்தவுடன் விண்ணப்பிக்கும் நிபந்தனைகள் என்ன? இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. இவற்றுக்கான விடையை இங்கே தெரிந்து கொள்வோம்.
PF எப்படி கழிக்கப்படுகிறது?
நீங்கள் எங்கு வேலை செய்தாலும், 8.33 சதவீதம் பணம் உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, அந்த பணம் உங்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. PF கணக்கில் உங்களுக்கு கொடுக்கப்படும் UAN எண்ணை எப்போதும் உங்களுடன் வைத்திருக்கவும். நீங்கள் உங்கள் முதல் நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்திற்கு மாறினால், உங்கள் பணம் அதே கணக்கிற்கு மாற்றப்படும். இதனுடன், நீங்கள் முதல் நிறுவனத்தில் பணிபுரிந்த நாட்களின் எண்ணிக்கையும் உங்கள் புதிய நிறுவனத்தின் வேலை நாட்களுடன் சேர்க்கப்படும். இந்த வழியில் உங்கள் 10 ஆண்டுகள் கணக்கிடப்படுகிறது.
மேலும் படிக்க | ஆதார் தரவுகளை பாதுகாக்க பயோமெட்ரிக்சை 'லாக்' செய்தால் போதும்: முழு செயல்முறை இதோ
10 ஆண்டுகள் முடியாவிட்டால் என்ன செய்வது?
10 வருடங்களாக வேலையை முடிக்க முடியாவிட்டால், பயப்பட ஒன்றுமில்லை. நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே உங்கள் ஓய்வூதியக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆனால் முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு உங்களுக்கு எந்த வட்டியும் கிடைக்காது. பணியில் 10 ஆண்டுகள் நிறைவடைந்து, கடைசி சம்பளத்தில் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்கும். UAN எண்ணை இழந்தால், உங்கள் PF புதிதாக கணக்கிடப்படும், எனவே UAN எண்ணை எப்போதும் உங்களுடன் வைத்திருப்பது முக்கியம்.
மேலும் படிக்க | ஆதார் எண் - போலி சிம் கார்டுகள் மோசடி; கண்டறியும் எளிய முறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ