புதுடெல்லி: சர்வதேச விலை கடுமையாக உயர்ந்து, உள்நாட்டில் சாகுபடி குறைந்துள்ளதால், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள், குறுகிய காலத்தில் நிவாரணம் அளிக்க வாய்ப்பில்லை. இது ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும் வாய்ப்பை உயர்த்துகிறது என்று தரகு நிறுவனமான பிரபுதாஸ் லில்லாதேரின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் CPI பணவீக்கம்
ஜூலையில், இந்தியாவில் CPI பணவீக்கம் அதிகரித்து, 15 மாதத்தில் மிக அதிகமாக 7.44 சதவீதத்தை எட்டியது, இது ஜூன் மாதத்தின் 4.81 சதவீதத்திலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று சொல்லலாம். இதில் ஜூலை மாத பணவீக்கம் தொடர்பான இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்துகிறது. முதலாவதாக, இந்த பணவீக்க அதிகரிப்பின் முதன்மை காரணம். உணவு விலைகள் ஆகும்.
காய்கறிகளின் விலை உயர்வு
இரண்டாவதாக, காய்கறிகளின் விலை உயர்வு. குறிப்பாக தக்காளி போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வு மட்டுமே பணவீக்க அதிகரிப்புக்கு காரணம் இல்லை என்று சொல்லலாம். மாறாக, தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்திற்கும் பணவீக்க அதிகரிப்புக்கும் காரணம் என்பது தெளிவாகியுள்ளது.
மேலும் படிக்க | வெள்ளரிக்காயை இப்படி சாப்பிட்டால் இந்தெந்த பிரச்னைகள் வரும் - முழு விவரம்
வானிலை மாற்றம்
ஒழுங்கற்ற வானிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளின் காலநிலை அபாயங்கள் மற்றும் உலகளாவிய உணவுப் பணவீக்கத்தின் அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவாக உள்நாட்டு உணவு விலைகள் ஜூலை 2023 இல் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
உணவுப் பணவீக்கம்
"எல் நினோ வரும் மாதங்களில் உணவுப் பணவீக்கத்திற்கு ஒரு சாத்தியமான பிர்ச்சனையாக மாறக்கூடும். கடந்த இரண்டு மாதங்களில் உணவுப் பணவீக்கத்தில் அதிகமான அதிகரிப்பை காண முடிகிறது, முக்கியமாக வழக்கத்திற்கு மாறான வானிலை காரணமாக ஒரு சில பயிர்கள் சேதமடைந்துள்ளன" என்று பகுப்பாய்வு அறிக்கை கூறுகிறது.
பருப்பு வகைகளின் விதைப்பு 9.2 சதவீதமும், எண்ணெய் வித்துக்களின் விதைப்பு 1.7 சதவீதமும் குறைந்துள்ளது. இது பாசிப்பயிறு, துவரை, உளுந்து மற்றும் மசாலாப் பொருட்களின் உற்பத்தியை பாதிக்கும்.
பருப்பு மகசூல்
"வரவிருக்கும் இரண்டு மாதங்களில் வறண்ட காலநிலை, பருப்பு வகைகளின் மகசூலை (உயரம், அடர்த்தி மற்றும் விளைச்சல்) பெரிய அளவில் பாதிக்கலாம், ஏனெனில் அவற்றின் சாகுபடி மானாவாரி பகுதிகளில் அதிகம் செய்யப்படுகிறது. சில மசாலாப் பொருட்களின் விலைகள் கொதிநிலையில் இருப்பதை நாங்கள் கவனிக்கிறோம். பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் விலை உயர்வை நிராகரிக்க முடியாது" என்று அறிக்கை கூறுகிறது.
தேர்தல் ஆண்டில் அதிக பணவீக்கம்
"தேர்தல் ஆண்டில் அதிக பணவீக்கம் ஒரு அரசியல் பிரச்சனையாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம், இது அரசுக்கு தலைவலியாக இருக்கும்" என்று அறிக்கை மேலுக் கூறுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில், பருவமழை நீண்ட கால சராசரியை விட கணிசமாக குறைந்துள்ளது, 30 சதவீதம் பற்றாக்குறையை பதிவு செய்துள்ள மழை பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் தென் பகுதிகள் குறிப்பாக வறண்ட நிலைகளை அனுபவித்துள்ளன.
ஈரமான ஜூலை காரணமாக 5 சதவீத உபரியுடன் மாதத்தை நேர்மறையான குறிப்பில் தொடங்கிய பிறகு, ஆகஸ்ட் மாதம் பருவமழை வீழ்ச்சியடைந்தது, ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்த பற்றாக்குறை 7 சதவீதமாக இருந்தது என்று அறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க | திருமணமான ஆண்கள் வலிமை பெற... மிளகில் மறைந்திருக்கும் வேற லெவல் நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ