Good News! Rs 9200 கோடி மதிப்புள்ள பங்குகளை Infosys திரும்ப பெறுகிறது

இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் தனது முதல் Buyback என்ற 13,000 கோடி ரூபாய் திட்டத்தை 2017 டிசம்பரில் வெற்றிகரமாக முடித்தது, பங்கு ஒன்றுக்கு 1,150 ரூபாய் என்ற விலையில் 11.3 கோடி பங்கு பங்குகள் அந்த சமயத்தில் வாங்கப்பட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 14, 2021, 07:20 PM IST
  • Rs 9200 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெறுகிறது இன்போசிஸ்
  • 2017ஆம் ஆண்டிலும் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது
  • 25.2 சதவீத பிரீமியம் தொகையுடன் பங்குகள் திரும்பப் பெறப்படுகிறது
Good News! Rs 9200 கோடி மதிப்புள்ள பங்குகளை Infosys திரும்ப பெறுகிறது title=

புதுடெல்லி: இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் தனது முதல் Buyback என்ற 13,000 கோடி ரூபாய் திட்டத்தை 2017 டிசம்பரில் வெற்றிகரமாக முடித்தது, பங்கு ஒன்றுக்கு 1,150 ரூபாய் என்ற விலையில் 11.3 கோடி பங்கு பங்குகள் அந்த சமயத்தில் வாங்கப்பட்டன.

தற்போது 9,200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெறுவதற்கு இன்போசிஸ் (Infosys) நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது 5.35 கோடி பங்குகளை அல்லது மொத்த மூலதனத்தின் 1.23 சதவீதத்தை திரும்ப வாங்கும் திட்டமாகும்.

ஒரு பங்குக்கு 1,750 ரூபாய் என்ற விலையில் இன்போசிஸ் நிறுவனம் பங்குகளை திரும்பப்பெறும். பங்கின் இறுதி விலையில் கூடுதலாக 25.2 சதவீத பிரீமியம் தொகையை கூட்டி இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

Also Read | பழமையான தங்க நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட பேக்கரி, கல்லறை

இந்திய தகவல் தொழில்நுட்ப சேவைகளின் முக்கிய நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம், ஏப்ரல் 14 ம் தேதி நடைபெறும் நிர்வாகக் கூட்டத்தில் பங்குகளை திரும்பப்பெறுதல் திட்டத்தை (infosys buyback) பரிசீலிக்கும் என்று ஞாயிற்றுக்கிழமையன்று கூறியிருந்தது.

இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம், தனது முதல் Buyback என்ற 13,000 கோடி ரூபாய் திட்டத்தை 2017 டிசம்பரில் வெற்றிகரமாக முடித்தது, பங்கு ஒன்றுக்கு 1,150 ரூபாய் என்ற விலையில் 11.3 கோடி பங்கு பங்குகள் அந்த சமயத்தில் வாங்கப்பட்டன.

இன்ஃபோசிஸ் அடுத்த தலைமுறை டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் சேவைகளில் உலகளாவில் நம்பர் ஒன் நிறுவனமாக உள்ளது. இது 46 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் (digital) மாற்றத்திற்கு இன்போசிஸ் உதவுகிறது.

Also Read | CBSE: 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வி அமைச்சகம்

உலகளாவிய நிறுவனங்களின் அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை நிர்வகிப்பதில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன் உள்ள இன்போசிஸ் நிறுவனம், தனது  வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

மாற்றத்தை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க உதவும் AI- இயங்கும் மையத்துடன் நிறுவனத்தை இயக்குவதன் மூலம் அதைச் முன்னெடுப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

பன்னாட்டளவிலான தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான நிறுவனமான இன்ஃபோசிஸ் இந்தியாவிலுள்ள பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 22 நாடுகளில் அலுவலங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வளர்ச்சி மையங்களையும் கொண்டுள்ளது.

ALSO READ | பிரதமர் என்றால் விதிவிலக்கா என்ன; அதிரடி காட்டிய நார்வே போலீஸ் 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News