ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..

Online Shopping Tips : நம்மில் பலருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்க பிடிக்கும். அப்படி ஆர்டர் செய்யும் பொருட்களின் விலையை எப்படி குறைப்பது என்று யோசித்ததுண்டா?   

Written by - Yuvashree | Last Updated : Apr 20, 2024, 07:36 PM IST
  • ஆன்லைன் ஷாப்பிங்கில் எப்படி பணத்தை சேமிப்பது?
  • கூப்பன்களை உபயோகிக்கலாம்.
  • தள்ளுபடி காலங்களை உபயோகிக்கலாம்
ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க.. title=

Online Shopping Tips : உலகம், 20 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல இல்லை. அன்று எதையாவது தெரியாத விஷயத்தை தேட வேண்டும் என்றால் நெட் சென்டரை தேடி தெருத்தெருவாக அலைய வேண்டி இருந்தது. இன்று, அதெல்லாம் இல்லை. நாம் தேடுவதை, சொடுக்கு போடுவதற்குள் கைக்கு தந்து விடுகிறது இணையதளம். உலக நிகழ்வுகளில் இருந்து உள்ளூர் நிகழ்வுகள் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள உதவும் இந்த இணையதளம், நாம் வேண்டுமென்று நினைக்கும் உணவுகளையும், பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து விடுகிறது. இதனால் பல்வேறு தொழில் வாய்ப்புகளும், அந்த துறையில் இருப்பவர்களுக்கும் நல்ல வளர்ச்சியை கொடுத்திருக்கிறது. 

ஆன்லைன் ஷாப்பிங்..

ஆன்லைன் ஷாப்பிங்கை பல கோடி வாடிக்கையாளர்கள், தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இது நேரத்தை மிச்சப்படுத்துவதாலும், நல்ல டீலிங்கில் இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் இதற்கு குவிந்து கொண்டே இருக்கின்றனர். ஆனாலும், சமயங்களில் ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் அதிக விலையில் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். இப்படி, ஆன்லைனில் ஆர்டர்களில் எப்படி விலையை குறைப்பது? 

விலைகளை ஒப்பிடலாம்:

ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முன்பு, அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களுள் ஒன்று, அந்த பொருளுக்கு வெவ்வேறு இணையதளங்களில் உள்ள விலைகளை ஒப்பிடுவதாகும். பல ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள், தங்களின் ஒரே தயாரிப்பை வெவ்வேறு விலைகளில் வழங்குகின்றனர். மேலும், அந்த பொருளின் விலை குறித்து ஆராயலாம். இது, பணத்தைச் சேமிக்க உதவும். ஆன்லைன் பொருட்களை வாங்குவதற்கு சிறந்த டீல்கள் மற்றும் தள்ளுபடிகளைக் கண்டறிய உங்களுக்கு சில இணையதளங்கள் உதவுகின்றனர். இதில் இருக்கும் விலையை ஒப்பிட்டு அந்த தளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். 

இலவச ஷிப்பிங் கொண்ட பொருட்கள்:

அனைத்து தளங்களும் ஷிப்பிங்கிற்கு சார்ஜ் செய்யாது. இது, அந்தந்த தளங்களை பொருத்தும், முகவரி மற்றும் விற்பனையாளர்கள் பொருத்தும் மாறும். ஒரு சில இணையதளங்கள், குறைவான விலையிலும் ஷிப்பிங் செய்யும். 

மேலும் படிக்க | Bank Holidays: இன்று வங்கி விடுமுறையா? ஏப்ரலில் இன்னும் எத்தனை நாட்களுக்கு லீவு?

விமர்சனங்களை பார்க்க வேண்டும்:

ஒரு பொருளின் விலை பிடிக்கவில்லை என்றால், அதன் விமர்சனங்களையும் ஸ்டார் ரேட்டிங்குகளையும் பார்க்கலாம். அந்த விமர்சனங்கள் பாரபட்சமற்றதாக இருந்தால் அந்த பொருளை ஆர்டர் செய்ய வேண்டாம். 

கூப்பன்கள்:

அமேசான், ஃப்ளிகார்ட் உள்ளிட்ட பல தளங்கள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்களை வழங்குகிறது. ஒரு சில கூப்பன்கள், அடுத்த பொருட்களை ஆர்டர் செய்கையில் அதற்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட சதவிகிதம் தள்ளுபடி இருப்பதாகவும், குறிப்பிட்ட தொகைகள் கேஷ்பேக் ஆக கிடைக்கும் என்றும் குறிப்பிடும். இதை பயன்படுத்தி, அடுத்த ஆர்டரின் போது பணத்தை சேமிக்கலாம். 

விழாக்கால தள்ளுபடிகள்:

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல், தீபாவளி-பொங்கல் விழாக்காலங்களில் 70 முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடிகள் கிடைக்கும். எனவே, இந்த காலங்களீல் பல்க் ஆக பொருட்களை ஆர்டர் செய்யலாம். 

மேலும் படிக்க | ரூ.5000த்தை வைத்து 5 கோடி சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News