பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்! உடனே இத பண்ணிடுங்க!

Passport Renewal: பாஸ்போர்ட் அப்டேட் செய்ய காலாவதியான மூன்று ஆண்டுகளுக்குள் அல்லது காலாவதியாகும் ஒரு வருடம் வரை முன்பே செயல்முறையை தொடங்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Mar 19, 2024, 12:45 PM IST
  • பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது அவசியம்.
  • காலாவதியான 3 ஆண்டுக்குள் புதுப்பிக்கலாம்.
  • இதற்கு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்! உடனே இத பண்ணிடுங்க! title=

Passport Renewal: பாஸ்போர்ட் என்பது ஒருவரின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. வணிகம் அல்லது கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் கட்டாயம் தேவை. ஒரு பாஸ்போர்ட் ஆனது எடுக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த பத்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதன் பிறகு கட்டாயம் அதனை புதுப்பிக்க வேண்டும். காலாவதியாகும் ஒரு வருடம் முன்பு அல்லது காலாவதியான மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வரை புதுப்பிக்க நேரம் கொடுக்கப்படுகிறது.  வெளிநாடுகளுக்கு செல்லும் போது எந்தவித பயண தடங்களும் ஏற்படாமல் இருக்க காலாவதியாகும் முன்பே பாஸ்போர்ட்டை புதுப்பித்து வைத்து கொள்வது நல்லது.  

மேலும் படிக்க | உங்கள் சிறுதாெழிலில் இருந்து அதிக வருமானம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..

குழந்தைகளின் பாஸ்போர்ட் ஆனது ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் அல்லது அவர்கள் 18 வயது ஆகும் வரை செல்லுபடியாகும். இந்த இரண்டில் எது முதலில் வருகிறதோ அதன்படி நடைமுறைப்படுத்தப்படும்.  15 முதல் 18 வயதுடைய சிறுவர்கள் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

ஆன்லைனில் மூலம் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி?

முதலில் பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்கு சென்று, 'புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்/பாஸ்போர்ட் மீண்டும் வழங்கவும்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.  பிறகு 'விண்ணப்பப் படிவத்தை நிரப்ப இங்கே கிளிக் செய்யவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.  அதன் பின்பு, விண்ணப்பதாரர், அவரது குடும்பம் மற்றும் முகவரி உட்பட தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட வேண்டும். இந்த செயல்முறை முடிந்த பின்பு, பழைய பாஸ்போர்ட்டின் விவரங்களை உள்ளிட வேண்டும். இறுதியில் அனைத்தையும் சரிபார்த்துவிட்டு, பாஸ்போர்ட் புதுப்பித்தல் கட்டணத்தைச் செலுத்தினால் போதும்.

விண்ணப்பக் கட்டணம்

- புதிய பாஸ்போர்ட் அல்லது விசா அச்சடிக்கும் பக்கம் (36 பக்கங்கள்) தீர்ந்துவிட்டால் கூடுதல் பக்கங்களுடன் கூடிய பத்து வருட செல்லுபடியாகும் பாஸ்போர்ட் பெற  ரூ.1,500 கட்டணமாக செலுத்த வேண்டும். 

- புதிய பாஸ்போர்ட் அல்லது  விசா அச்சடிக்கும் பக்கம் (60 பக்கங்கள்) தீர்ந்துவிட்டால் கூடுதல் பக்கங்களுடன் கூடிய பத்து வருட செல்லுபடியாகும் பாஸ்போர்ட் பெற ரூ. 2,000 கட்டணமாக செலுத்த வேண்டும். 

- குழந்தைகளுக்கான புதிய பாஸ்போர்ட் அல்லது 18 வயதின் கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் பெற ரூ. 1,000 கட்டணமாக செலுத்த வேண்டும். 

அப்பாயின்மென்ட் பெறுவது எப்படி?

அப்பாயின்மென்ட் பெற முதலில் பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் சென்று, Pay and Schedule Appointment என்பதை கிளிக் செய்யவும். பிறகு கட்டண முறையைத் தேர்வு செய்து, பாஸ்போர்ட் சேவா கேந்திராவை (PSK) தேர்ந்தெடுக்கவும். அதில் காண்பிக்கப்படும் தேதியில் உங்களுக்கு தேவையான தேதியை தேர்ந்தெடுத்து, 'பணம் செலுத்தி, அப்பாயிண்ட்மெண்ட்டை முன்பதிவு செய்யுங்கள்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் உங்களின் வயது, பாஸ்போர்ட் டைப் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் புதுப்பித்தல் கட்டணம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடனடியாக இந்த வேலையை முடிக்க வேண்டும் என்றால் தட்கல் திட்டத்தில் 2000 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் இருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு பணம் வரை எடுக்க முடியும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News