வோக்ஸ்வாகன் அதன் பெயரை 'வோல்ட்ஸ்வாகன் ஆஃப் அமெரிக்கா' என்று மாற்றுவதாக பல நாட்களாக வதந்திகள் உலா வந்தன.
ஜெர்மன் கார் தயாரிப்பாளர் வோக்ஸ்வாகன் அமெரிக்காவில் அதன் பெயரை மாற்றவில்லை, நிறுவனத்தால் வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டிற்கு மாறாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. மின்சார வாகனங்களை மேம்படுத்துவதில் தனது முயற்சிகளை பிரபலமாக்குவதற்காக "அமெரிக்காவின் வோல்ட்ஸ்வாகன்" என்று பெயர் மாற்றப்படும் என்று நிறுவனம் அறிவித்திருந்தது.
இருப்பினும், இவை அனைத்தும் ஏப்ரல் மாதம் விளையாட்டாக செய்யப்படும் ஏப்ரல் ஃபூல் என விளையாட்டு வித்தையாக மாறியது.
Also Read | BJP பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி
அறிவிப்பு வெளியான உடனேயே, பலர் இந்த செய்தியை வெளியிட்ட நிறுவனத்தை விமர்சித்தனர், மற்றவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனத்தின் டீசல் ஊழல் குறித்து நினைவூட்டினர், இதன் மூலம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் கார்கள் சுற்றுச்சூழல் நெறிமுறைகளுக்கு ஏற்ப இருப்பதாக நம்பி தவறாக வழிநடத்தப்பட்டனர்.
வோக்ஸ்வாகன் அதன் பெயரை ”அமெரிக்காவின் வோல்ட்ஸ்வாகன்” என்று மாற்றாது. பெயர் மாற்றுதல் என்பது ஏப்ரல் முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு ஒரு விளையாட்டான அறிவிப்பு. அனைத்து மின்சார ஐடி 4 எஸ்யூவியின் (electric ID.4 SUV) அறிமுகத்திற்காக ”அமெரிக்காவின் வோல்ட்ஸ்வாகன்” என்று அறிவித்தோம். மின்சார இயக்கத்தை (electric mobility) கொண்டு வருவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது பிரதிநிதித்துவப் படுத்துகிறது. என்று வோக்ஸ்வாகன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த செய்தி முதலில் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளிவந்தது, மேலும் புதிய லோகோக்கள் உட்பட நிறுவனத்தின் மறுபெயரிடும் முயற்சிகள் பற்றிய விரிவான விளக்கத்தையும் உள்ளடக்கியது. ஆனால் அந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெறப்பட்டது. ஜெர்மனியில் ஒரு வோக்ஸ்வாகன் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ், மறுபெயரிடுதல் வாகனங்களை சந்தைப்படுத்துவதற்கான ஒரு "நல்ல யோசனை" என்று கூறினார்.
Also Read | Strongest Passport: அழகான நாடுகளும், அவற்றின் மதிப்பு மிக்க பாஸ்போர்ட்களும்
வோக்ஸ்வாகன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராகும், மேலும் எரிபொருள் கார்களில் இருந்து மின்சாரத்திற்கு முழுமையாக மாறுவதற்கான முயற்சியில் இந்த ஆண்டு மின்சார கார் விநியோகத்தை வோக்ஸ்வாகன் அதிகரிப்பதில் முமுமுரமாக உள்ளது.
2025 ஆம் ஆண்டில் நிறுவனம் 19 பில்லியன் டாலர்களை மின்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலில் முதலீடு செய்கிறது. 2025 ஆம் ஆண்டில் உலகளவில் ஒரு மில்லியன் மின்சார வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை நிறுவனம் கொண்டுள்ளது.
சிறந்த முடிவுகளுக்காக டீசல் கார்களில் மென்பொருளை மோசடி செய்வதாக 2015 ஆம் ஆண்டில் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதற்காக, நிறுவனம் 38 பில்லியன் டாலர் அபராதம் மற்றும் சட்ட செலவுகளை செலுத்த வேண்டியிருந்தது.
மோசடி, நீதிக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் 2017 ல் தவறான அறிக்கைகளை வெளியிட்ட விவகாரத்தில், வோக்ஸ்வாகன் அமெரிக்க நீதித் துறையுடன் 4.3 பில்லியன் டாலர் தீர்வை எட்டியது குறிப்பிடத்தக்கது.
Also Read | அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR