)
ITR Filing: இது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான நேரம். 2023-2024 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிவிட்டது. இந்த காலக்கெடுவிற்குள் ஐடிஆர் தாக்கல் செய்வது அவசியமாகும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024. இந்த காலக்கெடுவிற்குள் ஐடிஆர் -ஐத் தாக்கல் செய்யவில்லை என்றால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரலாம். எனினும், சில காரணங்களால் உங்களால் ஜூலை 31 -க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனால், டிசம்பர் 31, 2024க்குள் தாமத ரிட்டனைத் தாக்கல் (Belated Return) செய்யும் வசதியும் உள்ளது.
பிலேட்டட் ஐடிஆர் ரிடர்ண் என்றால் என்ன?
தற்போதைய மதிப்பீட்டு ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ காலக்கெடுவுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு பிலேடட் ஐடிஆர் எனப்படும். இந்த மதிப்பீட்டு ஆண்டின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜுலை 31. வரி செலுத்துவோர் (Taxpayers) இந்த காலக்கெடுவை தவறவிட்டால், அதே மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 க்கு முன் பிலேடட் ITR ஐ தாக்கல் செய்யலாம். தாமதமாக தாக்கல் செய்வதற்கான சில விளைவுகள் உள்ளன என்றாலும், தாக்கலே செய்யாமல் இருப்பதற்கான அபராதத்தை எதிர்கொள்வதை விட இது சிறந்ததாக கருதப்படுகின்றது.
ITR Deadline: இதை தவறவிட்டால் என்ன நடக்கும்?
வருமான வரி விதிகளின்படி, உங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் தானாகவே புதிய வரி முறைக்கு (New Tax Regime) ஒதுக்கப்படுவீர்கள். அதாவது அந்த நிதியாண்டில், பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான வசதியை நீங்கள் இழக்க நேரிடும். கடைசி தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் பிலேடட் ஐடிஆர் (Belated ITR) புதிய வரி முறையின் கீழ் வைக்கப்படும்.
வரி முறைக்கான தேர்வு
வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது தங்கள் வரி முறையை தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் ஐடிஆரைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆகும். இந்தக் காலக்கெடுவிற்குள் வருமான வரி கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்பவர்கள் தங்கள் நிதி நிலைமைக்கு மிகவும் பொருத்தமான வரி விதிப்பு முறையை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக சம்பளம் பெறும் மக்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான அபராதம்
- 2023-24 நிதியாண்டில், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான (Income Tax Return Filing) காலக்கெடு ஜூலை 31, 2024 ஆகும்.
- இந்த கடைசி தேதியை நீங்கள் தவறவிட்டால், ஐடிஆர் -ஐத் தாமதமாகத் தாக்கல் செய்யலாம்.
- இருப்பினும், வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) பிரிவு 234F இன் கீழ், தாமதமாக ITR தாக்கல் செய்ய ரூ.5,000 கட்டணம் விதிக்கப்படலாம்.
- உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், தாமதமாக ITR தாக்கல் செய்வதற்கான கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்படும்.
- இந்த கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்வது முக்கியம் என்பதை வரி செலுத்துவோர் நினைவில் கொள்ள வேண்டும்.
தாமதமாக ITR தாக்கல் செய்வதால் ஏற்படும் பிற பிரச்சனைகள்:
- வருமான வரிக் கணக்கை தாமதமாகத் தாக்கல் செய்தால், உங்களுக்கு ஏற்பட்ட மூலதன இழப்பை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.
- வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக வரிப் பொறுப்புக்கு வழிவகுக்கும் எதிர்கால ஆதாயங்களை ஈடுகட்ட இந்த இழப்புகளை வரி செலுத்துவோரால் பயன்படுத்த முடியாது.
- கடைசி தேதிக்கு பிறகு (ஜூலை 31) வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பித்தால், வீட்டுச் சொத்திலிருந்து ஏற்படும் இழப்புகளைத் தவிர, பிற வகையான இழப்புகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ