மனிதர்கள் மீது COVID-19 தடுப்பூசி சோதனையை தொடங்கும் ஜான்சன் & ஜான்சன்..!

இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது...!

Last Updated : Jul 31, 2020, 01:56 PM IST
மனிதர்கள் மீது COVID-19 தடுப்பூசி சோதனையை தொடங்கும் ஜான்சன் & ஜான்சன்..! title=

இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது...!

COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. இந்நிலையில், ஆஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மூலம், குரங்குகளில் கொரோனா வைரஸ் தொற்றை “தடுக்க” முடிந்தது என்று நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. 

அதே பத்திரிகையில் கூறப்பட்டுள்ள மற்றொரு ஆய்வின் படி, ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) உருவாக்கிய தடுப்பூசி கூட இதே போன்ற முடிவுகளை அடைய முடிந்தது என்று கூறியது. இந்த இரண்டு முன்னணி தடுப்பூசி தயாரிப்பாளர்களின் கொரோனா விலங்கு சோதனைகளின் விரிவான கண்டுபிடிப்புகள் வியாழக்கிழமை Nature-ல் தனித்தனியாக வெளியிடப்பட்டன. இரு தடுப்பூசி தயாரிப்பாளர்களும் இப்போது மனிதர்கள் மீதானா சோதனை நடத்த தொடங்கியுள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித சோதனைகளைத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், ஜான்சன் & ஜான்சன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

ALSO READ | வாகனம் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்தினால் ₹10,000 அபராதம்..!

இரண்டு நாட்களுக்கு முன்பு, அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னா தெரபியூடிக்ஸ் உருவாக்கிய தடுப்பூசி அதன் விலங்கு சோதனைகளின் கண்டுபிடிப்புகளையும் வெளியிட்டது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் குரங்குகள் மீதான சோதனைகளின் முடிவுகள், சாதகமான முறையில் சோதனைகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடர்னா மனிதர்கள் மீதான மூன்றாம் கட்ட பரிசோதனையையும் தொடங்கியுள்ளது.

ஆக்ஸ்போர்டு மற்றும் மாடர்னா ஆகியவை அவற்றின் கட்டம் -1 மற்றும் இரண்டாம் கட்ட மனித சோதனைகளின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்டுள்ளன, அவையும் திருப்திகரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட சோதனைகள் சில மாதங்கள் ஆகலாம். முன்னணி மருந்து தயாரிப்பாளர்களில் ஒன்று இந்த ஆண்டு இறுதிக்குள் இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசியை இறுதி செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

Trending News