சில நிபந்தனைகளுடன் சிவப்பு மண்டலங்களிலும் மதுபான கடைகள் திறக்கப்படும்.

எந்தவொரு மாலிலும் அல்லது சந்தை பகுதிகளில் [மார்க்கெட்] உள்ள மதுபான கடைகளை தவிர பசுமை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலத்தில் அமைந்துள்ள அனைத்து கடைகளிலும் மதுபான விற்பனை செய்ய முடியும் என்று உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெளிவுபடுத்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 2, 2020, 06:11 PM IST
  • பச்சை, ஆரஞ்சு மண்டலங்கள் மற்றும் சிவப்பு மண்டலங்களில் மதுபான விற்பனையை அரசாங்கம் அனுமதித்துள்ளது.
  • கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள மதுபான கடைகள் மட்டுமே மூடப்படும். அங்கு விற்பனை கிடையாது
  • மதுபானத்தை வாங்க செல்பவர்கள் குறைந்தது 6 மீட்டர் தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.
சில நிபந்தனைகளுடன்  சிவப்பு மண்டலங்களிலும் மதுபான கடைகள் திறக்கப்படும். title=

மதுபானம்: கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு காலத்தை மே 17 [இரண்டு வாரம்] வரை நீட்டித்துள்ளது. ஆனால் இந்த முறை பல வகையான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பச்சை, ஆரஞ்சு மண்டலங்கள் மற்றும் சிவப்பு மண்டலங்களில் மதுபான விற்பனையை அரசாங்கம் அனுமதித்துள்ளது.  கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள மதுபான கடைகள் மட்டுமே மூடப்படும். அங்கு விற்பனை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

எந்தவொரு மாலிலும் அல்லது சந்தை பகுதிகளில் [மார்க்கெட்] உள்ள மதுபான கடைகளை தவிர பசுமை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலத்தில் அமைந்துள்ள அனைத்து கடைகளிலும் மதுபான விற்பனை செய்ய முடியும் என்று உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெளிவுபடுத்தியது. மதுபானக் கடைகளில், வாடிக்கையாளர்கள் சமூக தூரத்தையும் பின்பற்ற வேண்டும். மதுபானத்தை வாங்க செல்பவர்கள் குறைந்தது 6 மீட்டர் தூரத்தை கடைபிடிக்க வேண்டும். கடையில் ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கக் கூடாது. 

இந்த தளர்வ்ஃபூ மே 4 முதல் அமலுக்கு வரும். ஊரடங்கு உத்த்ரவின் மூன்றாவது கட்டம் மே 4 முதல் மே 17 வரை இருக்கும். நாட்டில் கொரோனா வைரஸைத் தடுக்க மே 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். ஊரடங்கு அமல் செய்யப்பட்டவுடன் நாடு முழுவதும் மது விற்பனை தடை செய்யப்பட்டது.

ஆல்கஹால் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்கள்:

ஊரடங்கு காலத்தில் கிட்டத்தட்ட 40 நாட்களாக மது அருந்தவில்லை. அத்தகைய நபர்களுக்கு அதிகமான பிரச்சினைகள் இருந்தன. மது கிடைக்காததால் சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பல மாநிலங்களில் இருந்து செய்திகள் வந்தன. இதன் பின்னர், டாக்டர்கள் பரிந்துரைத்த பின்னர் அவர்களுக்கு மதுபானம் வழங்குமாறு கேரள அரசு கலால் துறைக்கு உத்தரவிட்டது.

Trending News