Loan Moratorium Period: அக்டோபர் 1-க்குள் மத்திய அரசு விளக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!!

ஒத்திவைக்கப்பட்ட தவணைகளுக்கான வட்டி குறித்து கேள்வி எழுப்பிய மனுக்களுக்கு அதன் பிரமாண பத்திரத்தை விநியோகிக்குமாறு உயர் நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 29, 2020, 12:42 PM IST
  • நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச் அக்டோபர் 5 ஆம் தேதி இது குறித்த பல்வேறு மனுக்களை விசாரிக்கும்
  • RBI கடனாளிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு Moratorium கால அளவை நீட்டிப்பதற்கு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
  • மே மாதத்தில், ரிசர்வ் வங்கி கடன் தடையை இன்னும் 3 மாதங்கள், அதாவது ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக அறிவித்தது.
Loan Moratorium Period: அக்டோபர் 1-க்குள் மத்திய அரசு விளக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!!

புதுடெல்லி: COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு Moratorium அதாவது கடன் தடைக்காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட தவணைகளில் வங்கிகள் வட்டி வசூலிப்பது தொடர்பாக அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

இது குறித்த முடிவை வெளிப்படுத்தி, ஒத்திவைக்கப்பட்ட தவணைகளுக்கான வட்டி குறித்து கேள்வி எழுப்பிய மனுக்களுக்கு அதன் பிரமாண பத்திரத்தை விநியோகிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.

வரவிருக்கும் காலக்கெடுவைப் பற்றிய பத்து முகிய விஷயங்கள்:

- இந்த விவகாரம் மிகவும் தீவிரமான பல கருத்துகளை பெற்றுள்ளது என்றும் முடிவெடுக்கும் செயல்முறை மேம்பட்ட கட்டத்தில் உள்ளது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு (Supreme Court) அறிவித்தது.

- நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச் அக்டோபர் 5 ஆம் தேதி பல்வேறு தொழில்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்கும் என்று கூறியது.

- அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் அனுப்பப்படும் என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

- COVID-19 தொற்றுநோயால் தடைசெய்யப்பட்ட காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட தவணைகளில் வங்கிகளால் வட்டி வசூலிக்கப்படுவது குறித்து ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியது. இதனையடுத்து, செப்டம்பர் 10 ம் தேதி, உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவை நீட்டித்தது. மேலும் உத்தரவு வரும் வரை எந்தவொரு கணக்கையும் செயல்படாத சொத்து (NPA) அல்லது மோசமான கடன் என்று அறிவிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

ALSO READ: வங்கிக் கணக்கு மோசடியால் இழந்த முழு பணமும் திருப்பித் தரப்படும்: RBI

- செப்டம்பர் 3 ஆம் தேதி, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு அழுத்தத்தில் இருக்கும் கடனாளிகளுக்கு நிவாரணமாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை செயல்படாத சொத்துகளாக (NPA) அறிவிக்கப்படாத கணக்குகள், வெலும் உத்தரவுகள் வரும்வரை NPA ஆக அறிவிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) கூறியது.

- உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் ரிசர்வ் வங்கியின் மார்ச் 27 சுற்றறிக்கையின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான பிரச்சினைகளை எழுப்பியுள்ளன. இது தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் 1 முதல் இந்த ஆண்டு மே 31 வரை வரவிருக்கும் கால கடன்களை தவணை முறையில் செலுத்துவதற்கு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை வழங்க அனுமதித்தது. பின்னர், தடைசெய்யப்பட்ட காலம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

- தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட EMI-க்கள் மீதான வட்டி தள்ளுபடி என்பது அடிப்படை நிதி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், கால அட்டவணையின்படி கடன்களை திருப்பிச் செலுத்துபவர்களுக்கு இது ஒரு அநீதியாக இருக்கும் என்றும் மத்திய அரசு (Central Government) சமீபத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

- ரிசர்வ் வங்கி (RBI) அழுத்தத்தில் உள்ள சில கடனாளிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு Moratorium கால அளவை நீட்டிப்பதற்கு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

- மார்ச் 27 அன்று, அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் NBFC-க்கள் என அனைத்து அமைப்புகளும் மூன்று மாதம் என மொரடோரியம் அளவை அனுமதிக்க RBI கூறியது.

- மே மாதத்தில், ரிசர்வ் வங்கி கடன் தடையை இன்னும் 3 மாதங்கள், அதாவது ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக அறிவித்தது.

ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News