சிறு முதலீடு.. தேனீ வளர்ப்பில் ரூ. 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம் -முழு விவரம்

கொம்புத் தேனீ, மலைத் தேனீ, கொசுத் தேனீ, அடுக்குத் தேனீ, மேற்குலகத் தேனீக்கள், கிழக்குலகத் தேனீக்கள் என பல தேனீக்களின் வகைகள் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2021, 06:11 PM IST
  • சிறு தொழிலைத் தொடங்கி, லட்சங்கள் எப்படி சம்பாதிக்கலாம்.
  • தேனீக்களிலிருந்து பல பொருட்கள் தயாரிக்கலாம்.
  • தேனீ வளர்ப்பு தொழிலுக்கு அரசு 80-85% வரை மானியம் வழங்குகிறது.
சிறு முதலீடு.. தேனீ  வளர்ப்பில் ரூ. 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம் -முழு விவரம் title=

சிறு தொழில் தொடங்க யோசனை: கொரோனா காலத்தில் நீங்கள் தொழில் தொடங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சிறு தொழிலைத் தொடங்கி, அதன்மூலம் லட்சங்கள் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இந்த தொழிலில் ஒரு சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் நல்ல பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தால் தேனீ வளர்ப்பு தொழில் செய்யலாம். இந்தத் தொழிலைத் தொடங்க அரசு உங்களுக்கு மானியமும் வழங்குகிறது.

தேனீ வளர்ப்பு தொழில் என்றால் என்ன?
தேனீ வளர்ப்பில் இருந்து லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். தேனீக்களை சேகரித்து, வளர்த்து அதிலிருந்து தயாரிக்கப்படும் தேன் மற்றும் மெழுகை விற்பனை செய்வதன் மூலம், பல லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும். இது முற்றிலும் இயற்கையை சார்ந்ததாக கருதப்படுகிறது. தேனீ வளர்ப்பு என்பது விவசாயம் மற்றும் தோட்டக்கலை உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றலையும் கொண்டது மற்றும் சுற்று சூழலை மேம்படுத்த உதவும்.

தேனீ வளர்ப்பு தொழிலை எப்படி தொடங்குவது?
தேனீ வளர்ப்பு மற்றும் தீனி வளர்ப்புப் பெட்டிகளை எப்படி பராமரிப்பது என்பதைக் குறித்து தொழில்முறை சங்கங்களிலிருந்து தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தேனீக்களின் இருப்பிடம் மற்றும் உங்கள் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தேன் வகைகள் பற்றி விசாரிக்கவும். முதல் அறுவடைக்குப் பிறகு தேனீ வளர்ப்பு வேலையை மதிப்பீடு செய்யவும். உங்கள் தேனீக்கள் மற்றும் தேனீக்களின் ஆரோக்கியத்தையும் சரிபார்க்க வேண்டும். மேலும் தேனீ வளர்ப்பு தொழிலுக்கு ஆகும் செலவுகளை தேன் மற்றும் தேன் மெழுகு வருமானத்துடன் ஒப்பிடுங்கள். மேலும் தேனீ தொடர்பான பொருட்கள் விற்பனைக்கு மாநில வருவாய் துறையைத் தொடர்பு கொள்ளவும்.

ALSO READ | வெறும் 5000 ரூபாயில் தபால் அலுவலகத்தில் நீங்கள் பிசினஸ் தொடங்கலாம்!

தேனீ வளர்ப்பு சந்தை எப்படி இருக்கிறது?
தேனைத் தவிர, நீங்கள் தேனீக்களிலிருந்து பல பொருட்கள் தயாரிக்கலாம். தேன் மெழுகு, ராயல் ஜெல்லி, புரோபோலிஸ் அல்லது பீ கம் (Bee Gum) மற்றும் தேனீ மகரந்தம் போன்ற பொருட்கள் தயாரிக்கலாம். இந்த பொருட்கள் அனைத்தும் மனிதர்களுக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மற்றும் சந்தையில் மிகவும் விலை உயர்ந்தவை. எனவே அவற்றை விற்பதன் மூலம் நீங்கள் நல்ல வருமானம் ஈட்டலாம்.

தேனீ வளர்ப்பிற்கு முக்கியத்துவம்:
வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 'பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்த தேனீ வளர்ப்பு மேம்பாடு' (Development of Beekeeping for Improving Crop Productivity) என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயத்துறை மேம்படுத்தப்பட வேண்டும், உற்பத்தித்திறன் அதிகரிக்க வேண்டும். மேலும் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஆகியவை ஏற்படுத்துவது நோக்கமாகும்.

தேனீ வளர்ப்பு மானியம்:
தேசிய தேனீ வாரியம் NABARD (National Bank for Agriculture and Rural Development) உடன் இணைந்து இந்தியாவில் தேனீ வளர்ப்பவர் வணிகத்திற்கு நிதியளிப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இந்தத் துறையில் பெண்களை ஈடுபடுத்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீங்கள் அருகிலுள்ள தேசிய தேனீ வாரியத்தைத் (Beekeeping Development Committee) தொடர்பு கொள்ளலாம் அல்லது இணையதளத்தைப் பார்வையிடலாம். தேனீ வளர்ப்பு தொழிலுக்கு அரசு 80-85% வரை மானியம் வழங்குகிறது.

ALSO READ | பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது நன்மையா? தீமையா? அறிந்து கொள்ளுங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News