Bank of Baroda Press Release: பாங்க் ஆஃப் பரோடா அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும் bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் தொடங்கப்படுவதை அறிவித்தது. இது 399 நாட்களுக்கு 7.25% p.a., 333 நாட்களுக்கு 7.15 % p.a. என்ற கவர்ச்சிகரமான விகிதங்களில் வட்டி வழங்கும் ஒரு சிறப்பு டொமஸ்டிக் ரீடெயில் டெர்ம் டெபாசிட் திட்டமாகும். மேலும் இது மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50% p.a வட்டி வழங்குகிறது. அத்துடன் சேர்த்து முன் முடிப்பு விருப்பத்தேர்வை பயன்படுத்தாத டெபாசிட்டுக்களுக்கு 0.15% உபரி வட்டி வழங்குகிறது.399 நாட்களுக்கு அதிகபட்சமாக 7.90% ஆண்டு வட்டி வழங்குகிறது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வங்கி, அதிக வட்டி விகிதங்களை வழங்கும் ஒரு சிறப்பு டெர்ம் டெபாசிட் திட்டமான bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் தொடங்கப்படுவதை அறிவித்தது. 399 நாட்களுக்கு7.25% p.a. மற்றும் 333 நாட்களுக்கு 7.15% p.a. என்ற வட்டி விகிதத்தில் இரு வேறு கால வரையறைகளுடன் கூடிய தொகுப்பாக bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் வழங்கப்படுகிறது. ஜூலை 15, 2024 அன்று இந்தத் திட்டம் தொடங்குகிறது மற்றும் ரூ. 3 கோடிக்கும் குறைவான தனிநபர் டெபாசிட்டுகளுக்கு இது பொருந்தும். மூத்த குடிமக்கள் தங்கள் டெப்பாசிட்டின் மீது 399 நாட்களுக்கு 7.75% p.a. மற்றும் 333 நாட்களுக்கு 7.65% p.a. என்ற விகிதத்தில் 0.50% கூடுதல் வருமானத்தை பெறுவார்கள்.
இது தவிர முன் முடிப்பு விருப்பத்தேர்வை பயன்படுத்தாத டெபாசிட்டுக்களுக்கு மேலும் கூடுதலாக 0.15% உபரியாக வழங்கப்படுகிறது (குறைந்த பட்சம் 1 கோடியிலிருந்து 3 கோடிக்கும் குறைவான டெபாசிட் தொகைக்கு இது பொருந்தும்). bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் 399 நாட்களுக்கு அதிகபட்சமாக 7.90% ஆண்டு வட்டியை வழங்குகிறது, இதில் மூத்த குடிமக்களுக்கான கூடுதல் 0.50% p.a மற்றும் முன் முடிப்பு விருப்பத்தேர்வை பயன்படுத்தாத டெபாசிட்டுகளுக்கான உபரி 0.15% ஆகியவை உள்ளடங்கும். NRE வாடிக்கையாளர்கள் 399 நாட்களுக்கான bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டத்தைப் பெறலாம் மற்றும் 2.00 கோடிக்கும் குறைவான முன்முடிப்பு விலக்கப்பட்ட டெப்பாசிட்டுகளை மட்டுமே பெற முடியும்.
இந்த திட்டம் குறித்து பாங்க் ஆப் பரோடாவின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் ஸ்ரீ.சஞ்சை முதலியார் கூறியதாவது, ”பாங்க் ஆஃப்பரோடா வாடிக்கையாளர்களுக்கு தங்களின் சேமிப்புகளின் மீது அதிக வட்டி விகிதத்தில் வருமானம் ஈட்டும் வாய்ப்பை வழங்கும் bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. மேலும் இதன் இரண்டு காலவரையறைகளிலிருந்து உகந்த ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் இது அளிக்கிறது. தங்களது டெப்பாசிட்டுகளில் இருந்து அதிக இலாபத்தை ஈட்டுவதை உறுதி செய்வதற்கான ஒரு தருணமாக இது விளங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
bob மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டத்தை ஆன்லைன் மூலமாக அல்லது வங்கியின் எந்த ஒரு கிளை மூலமாகவும் தொடங்கலாம்.
மேலும் படிக்க | NPS முதலீட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? முழு லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ