அதிக வட்டியை தரும் தபால் நிலையத்தின் அசத்தலான திட்டம்!

வங்கிகளை விட தபால் நிலையங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்கள் அதிகமாக வழங்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 27, 2022, 07:09 AM IST
  • தேசிய சேமிப்பு நிலையான வைப்பு கணக்கில் 6.7% வரை வட்டி கிடைக்கும்.
  • ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் நிலையான வருமானத்தைப் பெறலாம்.
  • 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலங்களுக்கு 5.5 முதல் 6.7% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதிக வட்டியை தரும் தபால் நிலையத்தின் அசத்தலான திட்டம்! title=

பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை சமீபத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.  ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை காட்டிலும் தபால் நிலையங்களில் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தின் அளவு அதிகமாக கிடைக்கிறது.  தேசிய சேமிப்பு நிலையான வைப்பு கணக்கில் 6.7% வரை வட்டி கிடைக்கும்.  ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் நிலையான வருமானத்தைப் பெறலாம்.  

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியச் செய்தி - ஜூன் 30 கடைசி தேதி

ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலங்களுக்கு 5.5 முதல் 6.7% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.  இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ஆகும், அதிகபட்ச முதலீட்டு வரம்பு இதில் இல்லை.  ஒரு நிதியாண்டில் வங்கி எஃப்டியில் பெறப்படும் வட்டி 40 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை, இந்த வரம்பு 60 வயதுக்குட்பட்டவர்களுக்கானது.  அதே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எஃப்டி மூலம் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வருமானம் வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருமானத்தில் 10% டிடிஎஸ் கழிக்கப்படுகிறது.

தற்போது, ​​டெபாசிட் திட்டம் மற்றும் எஃப்டியில் 5 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80சியின் கீழ் வரி விலக்கு பெறலாம்.  இதன் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீட்டில் வருமான வரி விலக்கு பெறலாம்.  அதே நேரத்தில் வரி விலக்கின் பலன் 5 ஆண்டுகளுக்கு வங்கிகளின் எஃப்டிகளிலும் கிடைக்கும்.

மேலும் படிக்க | New Wage Code:1 ஜூலை முதல் சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News