கனடாவில் படிக்க விருப்பமா... SBI வழங்கும் சூப்பர் திட்டம்..!!!

க்யூபெக் (Quebec) தவிர கனடாவின் பிற பகுதிகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கான நிதி உதவி திட்டத்தை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Last Updated : Aug 10, 2020, 05:06 PM IST
  • ஜி.ஐ.சி என்பது ஒரு முதலீட்டுக் கணக்கு, இது ஒரு நிலையான காலத்திற்கு உத்தரவாத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
  • உங்கள் கணக்கு மற்றும் தனிப்பட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு வங்கி உங்கள் பெயரில் இரண்டு கணக்குகளைத் திறக்கப்படும்:
  • இந்தியா, சீனா, வியட்நாம் அல்லது பில்ப்பைன்ஸை சேர்ந்த மாணவர்களுக்கு உதவ எஸ்பிஐ கனடா பாங்க் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது
கனடாவில் படிக்க விருப்பமா... SBI வழங்கும் சூப்பர் திட்டம்..!!! title=

உங்களுக்கு கனடாவில் படிக்க விருப்பமா.. அப்படியானால், இது உங்களுக்கான ஒரு நற்செய்தி. உங்களுக்கு இதற்கான  நிதி உதவி அளிக்கும் சூப்பர் திட்டம் ஒன்றை எஸ்பிஐ கொண்டு வந்துள்ளது. மாணவர்களுக்கான ஜிஐசி திட்டதினால் பல ஆதாயங்கள் உள்ள எஸ்பிஐ ட்வீட் ஒன்றில் கூறியுள்ளது.

மாணவர்களுக்கான GIC Program என்பது என்ன?
 
க்யூபெக் (Quebec) தவிர கனடாவின் பிற பகுதிகளில் கல்வி கற்க விரும்பும், இந்தியா, சீனா, வியட்நாம் அல்லது பில்ப்பைன்ஸை சேர்ந்த மாணவர்களுக்கு உதவ எஸ்பிஐ கனடா பாங்க் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இதன் கீழ் நீங்கள் மாணவர்களுக்கான விசா அடிப்படையில், எஸ்பிஐ கனடா வங்கியிடம் நீங்கள் கனடா டாலர்(CAD) 10,000  முதலீடு செய்ய வேண்டும். 

GIC Program  என்றால் என்ன?
ஜி.ஐ.சி என்பது ஒரு முதலீட்டுக் கணக்கு, இது ஒரு நிலையான காலத்திற்கு உத்தரவாத வட்டி விகிதத்தை வழங்குகிறது. பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், உங்கள் நிதியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு GIC  முதலீடு செய்ய வேண்டும். அந்த நேரத்தில், உங்கள் பணத்திற்கு உத்தரவாத வட்டி விகிதம் கிடைக்கும்.

ALSO READ | எங்கும் ஆதார், எதிலும் ஆதார்: விரிவடையும் ஆதார் அட்டையின் பயன்பாடுகள்!!

மாணவர் ஜி.ஐ.சி திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

எஸ்பிஐ கனடா வங்கியில் ஒரு கணக்கை தொடக்கிய பிறகு, ஜிஐசி முதலீட்டை பெற CAD 10,000 மற்றும் கட்டணம் செலுத்த வேண்டும்.

உங்கள் கணக்கு மற்றும் தனிப்பட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு வங்கி உங்கள் பெயரில் இரண்டு கணக்குகள் திறக்கப்படும்:

1. ஒரு சூப்பர் சேவர் கணக்கு, அதாவது சேமிப்பு கணக்கு அல்லது ஒரு செக்கிங் கணக்கு: அதில் உங்கள் கணக்கிற்கு நாங்கள CAD 2,000 வரவு வைக்கப்படும்.

2. ஒரு நான் ரிடீமபிள் ஸ்டூடண்ட் ஜிஐசி கணக்கு: மீதமுள்ள CAD 8,000 தொகை ஒரு வருட காலத்திற்கு GIC கணக்கில் முதலீடு செய்யப்படும். இந்த கணக்கில் இருந்து ஒரு வருட காலத்திற்கு பணம் எடுக்கவோ, புதுப்பிக்கவோ இயலாது.

இந்த ஜி.ஐ.சி கணக்கில் உள்ள பணத்திற்கு கிடைக்கும்   ஒவ்வொரு மாதமும் 12 மாதங்களுக்கு, உங்கள் ஜி.ஐ.சி கணக்கிலிருந்து உங்கள் சேமிப்பு அல்லது செக்கிங் கணக்கில் இருந்து கிடைக்கும் வட்ட்டிக்கு சமமான மாதாந்திர தவணை மற்றும் வட்டி செலுத்தப்படும்.

ALSO READ | களையிழந்தது கிருஷ்ண ஜென்மாஷ்டமி.. வேலை இழந்த மதுராபுரி முஸ்லிம் கலைஞர்கள்..!!!

இதற்கு எவ்வளவு செலவாகும்?

இதற்கு எவ்வளவு செலவாகும்?

இந்த கணக்கை அமைப்பதற்கான சேவை கட்டணங்கள்:

எஸ்பிஐ மூலம் நிதி அனுப்பப்பட்டால் கனடா டாலர் 100.

எஸ்பிஐ தவிர வேறு வங்கியில் இருந்து நிதி அனுப்பப்பட்டால் கனடா டாலர் 150

Trending News