எங்கும் ஆதார், எதிலும் ஆதார்: விரிவடையும் ஆதார் அட்டையின் பயன்பாடுகள்!!

நலத்திட்டங்களைத் தவிர மற்ற பல விஷயங்களில் ஆதார் அட்டை பயன்பாட்டைத் தொடங்க அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 10, 2020, 01:06 PM IST
எங்கும் ஆதார், எதிலும் ஆதார்: விரிவடையும் ஆதார் அட்டையின் பயன்பாடுகள்!!
Zee Media

நலத்திட்டங்களைத் தவிர மற்ற பல விஷயங்களில் ஆதார் அட்டை பயன்பாட்டைத் தொடங்க அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இனி பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதார திட்டங்களிலும் ஆதார் அட்டைக்கான (Aadhar Card) பயன்பாடு உருவாகக்கூடும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது விரைவில் வரவிருக்கும் சுகாதார அடையாள அட்டையுடன் (Health Identification Card) இணைக்கப்படும். மேலும், ஓட்டுநர் உரிமத்தைப் பெறவும் இதைப் பயன்படுத்தலாம்.

நலத்திட்டங்கள் தவிர, இப்போது பல விஷயங்களில் ஆதார் அட்டை பயன்படுத்தப்படும். இது வரை நலத்திட்டங்களில் ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இது மற்ற திட்டங்களில் மோசடிகளைத் தடுக்க பயன்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். விரைவில் இது டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் பயன்படுத்தப்படும். அதிகாரிகளின் கூற்றுப்படி, இனி தனித்துவமான அடையாள எண் (UID) விரைவில் விவசாயம், கல்வி மற்றும் சுகாதார திட்டங்களிலும் பயன்படுத்தப்படும்.

இது மோசடியை பெரிய வகையில் கட்டுப்படுத்த உதவும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அரசு மானிய திட்டங்களின் பயனாளிகளை அடையாளம் காண ஆதார் பயன்பாட்டை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது. வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதிலும் இதை நீதிமன்றம் கட்டாயமாக்கியது. மேலும், ஆதார் அட்டையை பேன் கார்டுடன் (PAN card) இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டது.

ALSO READ:Ration Card வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது? நிபந்தனை என்ன? கட்டணம் எவ்வளவு? முழு விவரம்

அரசாங்கம் சமீபத்தில், சமூக நலன், புதுமுறைக் காணல், அறிவுசார் துறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய, நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகார  திகள் 2020 ஐ அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, எந்தவொரு அரசுத் துறையும் தங்கள் திட்டங்களை ஆதார் உடன் இணைக்க முடியும். இது சரிபார்ப்பு செயல்முறைகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.

நாட்டிற்குள் பல சேவைகளின் நன்மைகளைப் பெற, ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியமாகிவிட்டது. இதை செயல்முறைப்படுத்தும் நிறுவனமான UIDAI வழங்கியிள்ள அங்கீகாரத்தின் அடிப்படையில் இது அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ALSO READ: கஷ்டத்திலும் கூட நல்ல வருமானம் ஈட்ட வேண்டுமா? இந்த திட்டம் ஒரு சிறந்த வழி..