கடந்த ஜூன் 22 இல் H1B விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தளர்வு அறிவிப்பு..!
எச் -1 பி விசாக்களுக்கான சில கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. விதிகளில் மாற்றங்கள் விசா வைத்திருப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் அமெரிக்காவிற்கு வர அனுமதிக்கும் என்று டிரம்ப் அரசு கூறியுள்ளது.
வெளிநாட்டினர் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் H-1B மற்றும் H-4 விசாக்கள் ஆகிய இரண்டையும் வழங்க இந்த ஆண்டு இறுதி வரை தடை விதித்து கடந்த ஜூன் 22 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். கொரோனா காரணமாக பொருளாதாரம் பெரிய அளவில் சரிந்துள்ளது. அமெரிக்கர்கள் வேலையை இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதனால் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் H-1B மற்றும் H-4 விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று டிரம்ப் கூறினார்.
ALSO READ | எச்சரிக்கை ...! பால் பாக்கெட்டுகள் குறித்து FSSAI வெளியிட்ட பகீர் தகவல்..!
அமெரிக்காவில் இந்தியர்கள்தான் அதிக அளவில் H-1B மற்றும் H-4 விசாக்கள் உடன் வேலை பார்த்து வருகிறார்கள். முக்கியமாக ஐடி துறையில் பலர் இப்படி H-1B உடன் பணியாற்றுகிறார்கள். அங்கு கிரீன் கார்டு விண்ணப்பித்து இருக்கும் பலர் இப்படி H-1B மற்றும் H-4 விசாக்கள் மூலமே அங்கு தங்கி உள்ளனர். இந்நிலையில் H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதை டிரம்ப் நிறுத்தியது பெரிய சர்ச்சையானது. இந்தியர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அமெரிக்க தேர்தல் வரும் சமயத்தில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று இருக்கும் இந்தியர்களின் வாக்குகள் மிக முக்கியம் ஆகும். இப்படிப்பட்ட நேரத்தில் இந்தியர்களை பாதிக்கும் வகையில் டிரம்ப் கொண்டு வந்த சட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தற்போது H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதற்கான தடையில் சில தளர்வுகளை டிரம்ப் செய்துள்ளார். அதன்படி அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் அதே வேலைக்கு திரும்பினால், அவர்களுக்கு H-1B விசா வழங்கப்படும். அதாவது அமெரிக்காவில் உள்ள அதே நிறுவனத்தில், அதே வேலைக்கு திரும்பினால் H-1B விசா வழங்கப்படும்.
இவர்கள் உடன் அமெரிக்கா வரும் பணியாளர்களின் மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் H -4 விசா வழங்கப்படும் என்று தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் பணியாற்றி வந்த டெக்கினிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் மேனேஜர்கள் உள்ளிட்ட உயர் பதவி வகித்தவர்களுக்கும் H-1B விசா வழங்கப்படும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் இப்படி செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு டிரம்ப் இந்த தளர்வை கொண்டு வந்துள்ளார் என்கிறார்கள்.