H1B விசா விதிகளில் அதிரடி மாற்றம்... இந்தியர்களுக்கு பலனளிக்குமா..!!

Changes in H1B Visa Rules: அமெரிக்க அரசாங்கம் H1B விசா விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்து, மாற்றங்களுக்கான பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 22, 2023, 03:24 PM IST
  • இந்திய தொழிலாளர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேர்வு செயல்முறையில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள்.
  • ஆண்டு வரம்பு 60 ஆயிரம் எச்1பி விசாக்கள் மாறாமல் இருக்கும்.
H1B விசா விதிகளில்  அதிரடி மாற்றம்... இந்தியர்களுக்கு பலனளிக்குமா..!!

அமெரிக்காவில் பணி செய்யும் வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கான, 'எச்1பி' (H1B) உள்ளிட்ட, 'விசா' வழங்கும் நடைமுறை செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்க அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. இதற்கான புதிய விதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்க அரசாங்கம், எச்1பி விசா விதிகளை மாற்றுவதற்கான திட்டத்தை முன் வைத்துள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் நோக்கம், முதலாளிக்கும் பணியாளருக்கும் இடையே நெகிழ்வுத்தன்மையைக் கொண்டு வருவது மற்றும் சாத்தியமான துஷ்பிரயோகம் மற்றும் மோசடியைத் தடுப்பதாகும். அமெரிக்க அரசாங்கம் H1B விசா விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்து, மாற்றங்களுக்கான பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Add Zee News as a Preferred Source

பெரிய மாற்றங்களைச் செய்த பிறகும், அமெரிக்க அரசு வழங்கும் ஆண்டு வரம்பு 60 ஆயிரம் எச்1பி விசாக்கள் மாறாமல் இருக்கும். இருப்பினும், இந்திய தொழிலாளர்கள் இந்த மாற்றங்களால் அதிக பலன்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. H1B விசாவில் அரசாங்கம் என்ன மாற்றங்களை முன்வைத்துள்ளது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறையில் முன்மொழியப்பட்டுள்ள  மாற்றங்கள்

அமெரிக்க விசா பெறுவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க, ஒற்றைப் பதிவுத் தேர்வு முறையை அமல்படுத்த திட்டம் உள்ளது. PTI வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் பதிவு எண் எதுவாக இருந்தாலும், ஒரு முறை மட்டுமே நுழைவு வழங்கப்படும்.

மோசடி தடுப்பு  நடவடிக்கை

விசா பெற ஒரு முறைக்கு மேல் பதிவு அனுமதிக்கப்படாது. அதனால் மோசடிக்கான வாய்ப்புகள் குறையும். இந்த விதியை மீறினால் விண்ணப்பத்தை நிராகரிக்கும் திட்டமும் ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க | H1 B விசாவைப் புதுப்பிக்க வெளிநாடு செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரதமர்

விசா பெறுவதற்கான தகுதியிலும் மாற்றம்

விசா பெற விண்ணப்பிப்பவர்களின்  கல்வியைத் தவிர, ஆட்களைத் தேர்ந்தெடுப்பது மற்ற அளவுகோல்களிலும் கவனம் செலுத்தும். PTI வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் வேலையை விரிவாக விவரிக்க வேண்டும்.

ஸ்டார்அப் மற்றும் வணிகர்களுக்கு சாதகமாக விதிகள்

அமெரிக்க  H1B விசா குறிப்பாக தொழிலதிபர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு பயனளிக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இந்த மாற்றங்களால் இந்தியர்கள் நிச்சயம் பயனடையலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்க அரசின் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், H1B விசாவில் மாற்றம் F1 திட்டத்திற்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும்.

H1B வகை விசா

அமெரிக்காவில் வேலை செய்ய மட்டும் அனுமதி வழங்கும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு H1B வகை விசாக்களை அந்த நாடு வழங்கி வருகிறது.  அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு தனிப்பட்ட திறமை தேவைப்படும் சில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள, இந்தியா உள்ளிட்ட  வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்திக் கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதி தான் H1B விசா. 3 ஆண்டுகளுக்கு கொடுக்கப்படும் இந்த விசா, குடியுரிமைக்கான அனுமதி அல்ல. எனினும், H1B விசா வைத்திருக்கும் நபர் 6 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் பணியாற்றினால், அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறும் கிரீன்கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.

மேலும் படிக்க | H1B விசா விண்ணப்பம் லேட்டஸ்ட் அறிவிப்பு! மகிழ்ச்சியில் இந்திய ஐடி துறையினர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News