Income Tax Returns: வருமான வரி ரிட்டர்ன் என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வருமானம் மற்றும் வரிப் பொறுப்புகளை கோடிட்டுக் காட்டும் ஆவணமாகும். இதை தனி நபர்களும் நிறுவனங்களும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் ஒருவர் மேற்கொள்ளும் நிதி பரிவர்த்தனைகளின் பதிவாக இது செயல்படுகிறது. வரி செலுத்தும் வழிமுறையில் வருமான வரி படிவங்களுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. இவற்றின் மூலம் வரி செலுத்துவோருக்கு தங்கள் வருமானம், விலக்குகள் மற்றும் வரவுகளைத் துல்லியமாகத் தெரிவிக்க ஒரு கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பு கிடைக்கிறது. இந்தப் படிவங்கள் வரிச் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்து, செலுத்த வேண்டிய வரியின் சரியான தொகையை அல்லது பெற வேண்டிய ரீஃபண்டுகளை சரியாக கணக்கிட உதவுகின்றன.
ஏழு ஐடிஆர் படிவங்கள் மற்றும் அவற்றின் நோக்கங்கள் பற்றி இங்கே காணலாம்.
2024-25 நிதியாண்டுக்கான ஐடிஆர்-6 (ITR-6 ) எக்செல் யுடிலிடியை (Excel Utility) வருமான வரித்துறை (Income Tax Department) வெளியிட்டுள்ளது. இதற்கு முன், 2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர்-1 (ITR-1), ஐடிஆர்-2 (ITR-2) மற்றும் ஐடிஆர்-4 (ITR-4) ஆகியவற்றிற்கான எக்செல் யுடிலிடியை துறை வெளியிட்டது. இந்தப் படிவங்கள் e-filing பக்கத்தில் 'downloads' விருப்பத்தின் கீழ் கிடைக்கும். வரி செலுத்தும் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடு தேதியில் அல்லது அதற்கு முன் தங்களது ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
முதலாவதாக, எந்த வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தை ஒருவர் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க, வருமான ஆதாரங்கள், குடியிருப்பு நிலை மற்றும் குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகள் போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கான ஒரு பொதுவான வழிகாட்டுதல்களை இங்கே காணலாம்.
ITR-1 (சஹஜ்): சம்பளம், ஒரு வீட்டுச் சொத்து, பிற ஆதாரங்கள் (வட்டி போன்றவை) ஆகியவற்றிலிருந்து வருமானம் பெறும் மற்றும் மொத்த வருமானம் ரூ. 50 லட்சம் வரை அல்லது விவசாய வருமானம் ரூ. 5000 வரை உள்ள குடியுரிமை பெற்ற தனிநபர்களுக்கான படிவம் இது.
ITR-2: வணிகம் அல்லது தொழிலின் இலாபங்கள் மற்றும் ஆதாயங்களிலிருந்து வருமானம் பெறாத தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்களை (HUF) சேர்ந்தவர்களுக்கானது.
ITR-3: இது வணிகம் அல்லது தொழிலின் இலாபங்கள் மற்றும் ஆதாயங்களிலிருந்து வருமானம் பெறும் தனிநபர்கள் மற்றும் HUF களுக்கானது.
ITR-4 (Sugam): இந்த படிவம் மொத்த வருமானம் ரூ. 50 லட்சம் மற்றும் வணிகம் மற்றும் தொழிலில் இருந்து ஊகிக்கக்கூடிய வருமானம் பெறும் தனிநபர்கள், HUFகள் மற்றும் நிறுவனங்களுக்கானது (வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை தவிர).
மேற்கூறிய ஆதாரங்களில் இருந்து ஃப்ரீலான்ஸராகப் பணம் பெறும் தனிநபர்கள், அவர்களின் மொத்த வருவாய் ரூ. 50 லட்சத்தை தாண்டாமல் இருந்தால், ஒரு அனுமான திட்டத்திற்கு தகுதியுடையவர்களாகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ITR-5: இது தனிநபர்கள், HUF, நிறுவனங்கள் மற்றும் ஐடிஆர்-7 படிவத்தை தாக்கல் செய்யும் நபர்களைத் தவிர மற்றவர்களுக்கானது.
ITR-6: இது பிரிவு 11 இன் கீழ் விலக்கு கோரும் நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்களுக்கானது.
ITR-7: இது பிரிவுகள் 139(4A) அல்லது 139(4B) அல்லது 139(4C) அல்லது 139(4D) அல்லது 139(4E) அல்லது 139(4F) ஆகியவற்றின் கீழ் வருமானத்தை அளிக்க வேண்டிய நிறுவனங்கள் உள்ளிட்ட நபர்களுக்கானது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ