வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்? விதியை மீறினால் நஷ்டம்... ஜாக்கிரதை!!

Bank Account: உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணத்தை சேமித்து வைப்பது பாதுகாப்பானது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை நீங்கள் பணத்தை சேமித்திருக்கும் வங்கி திவால் ஆனாலும், விதிகளை பின்பற்றினால் நீங்கள் ஒரு ரூபாயை கூட இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2024, 04:30 PM IST
  • வங்கியில் எவ்வளவு பணத்தை சேமிக்கலாம் தெரியுமா?
  • வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வைப்பது பாதுகாப்பானது?
  • பல்வேறு கணக்குகள் இருந்தால் என்ன நடக்கும்?
வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்? விதியை மீறினால் நஷ்டம்... ஜாக்கிரதை!! title=

Bank Account: இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் வங்கி கணக்கு உள்ளது. டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரித்து வரும் இன்றைய வேளையில் மக்கள் பணத்தை சேமித்து வைக்கும் முறையும் செலவழிக்கும் முறையும் வெகுவாக மாறி உள்ளன. எனினும் நம்மில் பெரும்பாலானோருக்கு வங்கி கணக்கு இருந்தாலும் வங்கி கணக்குகள் தொடர்பான சில விதிகளும் உள்ளன என்பது தெரிவதில்லை. வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விதிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

வங்கியில் எவ்வளவு பணத்தை சேமிக்கலாம் தெரியுமா?

உங்கள் வங்கிக் கணக்கில் (Bank Account) எவ்வளவு பணத்தை சேமித்து வைப்பது பாதுகாப்பானது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை நீங்கள் பணத்தை சேமித்திருக்கும் வங்கி திவால் ஆனாலும், விதிகளை பின்பற்றினால் நீங்கள் ஒரு ரூபாயை கூட இழக்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை சேமிப்பு கணக்கில் வைத்தால் உங்களுடைய மொத்த தொகையையும் நீங்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அனைவருக்கும் வங்கிக்கணக்கு

சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசாங்கம் (Central Government) ஜன் தன் திட்டத்தை (Jan Dhan Yojana) திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன் பின்னர் நாட்டில் கிட்டத்தட்ட அனைவரிடமும் ஒரு வங்கி கணக்கு உள்ளது. ஜன் தன் திட்டத்தின் கீழ் மட்டும் சுமார் 45 கோடி வங்கி கணக்குகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டன. ஆனால் ஒருவருடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணம் வைப்பது பாதுகாப்பானது என்பது பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்குமா என்று கேட்டால் இருக்காது என்பதுதான் அதன் பதிலாக இருக்கும். 

பெரும்பாலும் வங்கிகள் (Banks) அத்தனை எளிதாக திவால் ஆவதில்லை. எனினும் சமீபத்திய நாட்களில் பல வங்கிகள் மோசமான நடைமுறைகளிலும் செயல்முறைகளிலும் ஈடுபட்டு திவாலானதை நாம் பார்த்து வருகிறோம். மிகவும் பிரபலமான வங்கியாக இருந்த எஸ் பேங்க் (Yes Bank) சமீபத்தில் திவால் நிலையின் விளிம்பிற்கு சென்று திரும்பி வந்தது அனைவரும் அறிந்ததே.

மேலும் படிக்க | PMJJBY காப்பீட்டு திட்டம்... 40 ரூபாயில் ரூ.2 லட்சத்திற்கான காப்பீடு பெறலாம்

வங்கிகளில் வங்கி வாடிக்கையாளர்கள் (Bank Customers) சேமித்து வைக்கும் பணம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் கிடையாது. வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டாலோ, அல்லது, ஏதாவது இயற்கை சீற்றத்தால் வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ உங்களுடைய மொத்த தொகைக்கும் வங்கிகள் பொறுப்பேற்காது. அத்தகைய நிலைமையில் வங்கிகள் உங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க நீங்கள் வங்கிகளில் எந்த அளவு தொகையை வைத்திருப்பது பாதுகாப்பானது என்பதை பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். இதை பற்றிய புரிதல் இருந்தால், எதிர்பாராத பாதிப்புகளின் போது உங்கள் பணம் நஷ்டம் ஆவதை நீங்கள் தவிர்க்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் இருந்தால், வங்கிகள் அந்த தொகையை உங்களுக்கு அளிக்காது. நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், இதற்கான விதிகளில் கூறப்பட்டுள்ள தொகைக்கு மேல் உங்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்காது.

வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வைப்பது பாதுகாப்பானது?

வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எவ்வளவு பணத்தை திருப்பிக் கொடுக்கும்? டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் காரன்டி கார்ப்பரேஷன் சட்டம் 1961 இன் பிரிவு 16 (1) -இன் கீழ் நீங்கள் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்தில் 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு மட்டுமே வங்கிகள் உத்திரவாதம் அளிக்கின்றன. இதற்கு மேலான தொகை வங்கிக் கணக்கில் இருந்து, வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டால் அந்தத் தொகை வாடிக்கையாளருக்கு மீண்டும் கிடைக்காது. இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன் உங்கள் டெபாசிட்டுக்கான (Bank Deposits) உத்தரவாதத்தை அளிக்கின்றது. ஆனால், நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் தொகை 5 லட்சத்தை விட அதிகமாக இருந்தால், அந்த தொகைக்கு இந்த உத்தரவாதம் கிடைக்காது என்பதி மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பல்வேறு கணக்குகள் இருந்தால் என்ன நடக்கும்?

வங்கியில் நீங்கள் பல்வேறு கணக்குகளில் எவ்வளவு பணத்தை வைத்திருந்தாலும் 5 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே உத்தரவாதம் இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டும். உங்கள் தொகையை நீங்கள் சேமிப்பு கணக்கிலோ (Savings Account), நடப்பு கணக்கிலோ (Current Account) அல்லது ஃபிக்ஸ்ட் டெபாசிட் என (Fixed Deposit) எதில் வைத்திருந்தாலும், மொத்தமாக 5 லட்சத்திற்கு மேலான தொகையை வங்கி திருப்பிக் கொடுக்காது.

மேலும் படிக்க | Joint Account: கூட்டுக்கணக்கு வைத்துக்கொள்வது லாபமா? நஷ்டமா? பதில் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News