மக்கள் மருந்தகம் தொடங்கி.. பம்பர் வருமானம் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை..!

பொதுமக்களுக்கு மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதற்காக மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு மக்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் பம்பர் வருமானம் ஈட்டலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 29, 2023, 01:49 PM IST
  • ஜன் ஔஷதி கேந்திராவில் மருந்து விற்பனையில் 20 சதவீதம் வரை கமிஷன் கிடைக்கும்.
  • ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை அரசு உதவி வழங்குகிறது.
  • மக்கள் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் முறை.
மக்கள் மருந்தகம்  தொடங்கி.. பம்பர் வருமானம் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை..! title=

தொழில் தொடங்க அல்லது வியாபாரம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு, இன்று நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த வணிக யோசனையைப் கொண்டு வந்துள்ளோம். இதில் மத்திய அரசு பெரும் பணம் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. மருத்துவத் துறையில் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க முடியும். கொரோனா காலத்திற்கு பிறகு, மருத்துவ கட்டமைப்புகளையும், தேவைகளை நிறைவேற்றவும், அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், மருத்துவத் துறைக்கான தேவை அதிகரித்துள்ளது. பொது மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் குறைந்த விலையில், மருந்துகளை வழங்குவதற்காக பிரதம மந்திரி ஜன் ஔஷதி கேந்திரா என்னும் மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு வாய்ப்பு அளிக்கிறது. இதற்கான உதவிகளையும் அரசு செய்து வருகிறது.

மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. மார்ச் 2024க்குள் நாடு முழுவதும் பிரதம் மந்திரி ஜன் ஔஷதி கேந்திரா என்னும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை (Jan Aushadhi Kendra) A 10,000 ஆக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சாமானிய மக்களுக்கான மருந்துச் செலவைக் குறைக்கும் வகையில் மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.

மக்கள் மருந்தகத்தை திறப்பதற்கான தகுதி

ஜன் ஔஷதி கேந்திராவை திறப்பதற்கு அரசாங்கம் மூன்று வகைகளை உருவாக்கியுள்ளது. முதல் பிரிவில்,  வேலையில்லாத மருந்தாளர் அல்லது மருத்துவர் அல்லது பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர் எவரும் ஜன் ஔஷதி கேந்திரா என்னும் மக்கள் மருந்தகத்தை திறக்கலாம். அதேசமயம், இரண்டாவது பிரிவில் அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவை அடங்கும். மூன்றாவது பிரிவில், மாநில அரசுகளால் பரிந்துரைக்கப்படும் ஏஜென்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதாவது, நீங்கள் மக்கள் மருந்தகத்தை திறக்க விரும்பினால், நீங்கள் டி பார்மா அல்லது பி பார்மா பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது பட்டத்தை சான்றாக சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். PMJAY திட்டத்தின் கீழ், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு மருந்து மையத்தைத் திறப்பதற்காக ரூ.50,000 வரை மருந்து முன்பணமாக வழங்கப்படுகிறது.  இதன் உதவியுடன், பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திரா என்ற பெயரில் மருந்துக் கடை திறக்கப்பட்டுள்ளது.

மக்கள் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் முறை

ஜன் ஔஷதி கேந்திரா என்னும் மக்கள் மருந்தகத்தை திறக்க, முதலில் ஜன் ஔஷதி கேந்திரா என்ற பெயரில் 'சில்லறை மருந்து விற்பனை' உரிமத்தைப் பெற வேண்டும். இதற்கு https://janaushadhi.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவத்தைப் பதிவிறக்கிய பிறகு, பியூரோ ஆஃப் பார்மா பப்ளிக் செக்டார் அண்டர்டேக்கிங் ஆஃப் இந்தியாவின் பொது மேலாளர் (ஏ&எஃப்) என்ற பெயரில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க | மக்கள் மருந்தகம்... இனி பொது மக்களுக்கு 75% தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்குமா..!!

மக்கள் மருந்தகம் மூலம் கிடைக்கும் வருமானம்

ஜன் ஔஷதி கேந்திராவில் மருந்து விற்பனையில் 20 சதவீதம் வரை கமிஷன் கிடைக்கும். இந்த கமிஷன் தவிர, ஒவ்வொரு மாதமும் செய்யப்படும் விற்பனையில் 15 சதவீதம் வரை தனி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மருந்து கடை திறக்க, தளபாடங்கள் மற்றும் இதர பொருட்களுக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை அரசு உதவி வழங்குகிறது. பில்லிங் செய்ய கம்ப்யூட்டர்கள் மற்றும் பிரிண்டர்கள் வாங்குவதற்கு 50,000 ரூபாய் வரை அரசு உதவி வழங்குகிறது.

மேலும் படிக்க | நாம் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரியின் புதிய விதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News