IRCTCயுடன் ஜொமோட்டோ ஒப்பந்தத்தால், எகிறிய பங்கு விலை! Zomato பணியாளர்களுக்கு ஜாலி

Zomato Deal With IRCTC: ஜொமோட்டோ பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது! காரணம், ஐஆர்சிடிசி உடனான ஒப்பந்தமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 18, 2023, 05:52 PM IST
  • உச்சத்தைத் தொட்ட ஜொமோட்டோ பங்கு
  • ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்த பங்கு விலை
  • ஐஆர்சிடிசி ஒப்பந்தம் போட்ட ஜொமோட்டோ
IRCTCயுடன் ஜொமோட்டோ ஒப்பந்தத்தால், எகிறிய பங்கு விலை! Zomato பணியாளர்களுக்கு ஜாலி title=

மும்பை: உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஜொமோட்டோ நிறுவனம் ஐஆர்சிடிசி உடன் ஒப்பந்தம் செய்ததை அடுத்து பங்கின் விலை அதிகரித்துள்ளது. இந்தியன் ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் இணைந்து உணவு டெலிவரி செய்வது குறித்து ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து ஜொமோட்டோ பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஜொமோட்டோ நிறுவனம் ஐ ஆர்சிடிசி உடன் இணைந்து டெல்லி, பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக சேவையை தொடங்க உள்ளது. ஐஆர்சிடிசியின் ஆன்லைன் கேட்டரிங் போர்ட்டல் மூலம் முன்கூட்டியே உணவுகளை ஜொமோட்டோ நிறுவனம் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. 

உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஜோமோட்டோ நிறுவனம் ஐஆர்சிடிசி உடன் ஒப்பந்தம் செய்துள்ளதை அடுத்து, ஜெமோட்டா நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. அக்டோபர் 18ம் தேதியான இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஜெமோட்டோ  பங்கின் விலை ரூ.115 என்ற அதிகபட்ச விலையை அடைந்தது. அதன் பிறகு சரிவை சந்தித்த பங்கின் விலை 12.16 மணியளவில் 2.15 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்து ரூ.111.15 என்ற நிலையில் வர்த்தகமானது.

மேலும் படிக்க | பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை

மாலையில் ஜொமோட்டோ பங்கின் விலை மட்டும் இல்லாமல் ஐஆர்சிடிசி பங்கு விலை சற்று குறைந்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் பங்கின் விலை 0.08 சதவிகிதம் குறைந்து ரூ.714.05 ஆக உள்ளது.

ஐஆர்சிடிசி நிறுவனம் ரயில் டிக்கெட் முன்பதிவைப் போலவே பேருந்து டிக்கெட் முன்பதிவு சேவையையும் விரைவில் தொடங்க உள்ளது. அதாவது ஐஆர்சிடிசி பேருந்து முன்பதிவு போர்டல்,இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

irctc zomato

எம்எஸ்ஆர்டிசியின் ஆன்லைன் பேருந்து முன்பதிவு சேவைகளை (MSRTC Bus Ticketing APIs) மேற்கொள்வதற்காக செப்டம்பர் மாதம், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்துடன் (Maharashtra State Road Transport Corporation) நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டல்களிலிருந்து உணவு சப்ளை செய்யும் ஸொமேட்டோ நிறுவனம் தமது ஊழியர்களுக்கு, அண்மையில் 4.66 கோடி பங்குகளை பங்கு ஒன்றை ஒரு ரூபாய்க்கு வழங்கியது. முன்னணி நிறுவனங்கள், ஊழியர்களை தங்களிடமே தக்க வைக்கும் பொருட்டு பங்குகளை குறைந்த விலையில் வழங்குவது வாடிக்கையான நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.  

சலுகை விலையில் கிடைக்கும் பங்குகளை வாங்கும் ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த பங்குகளை விற்பனை செய்ய முடியாது. குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு ஊழியர்கள் ஓப்பன் மார்க்கெட்டில் பங்குகளை விற்று பணமாக்கிக் கொள்ள முடியும்.

(பொறுப்புத் துறப்பு: பங்கு செயல்திறன் பற்றிய தகவல் மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, இது முதலீட்டு ஆலோசனை அல்ல. பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஆபத்துகளுக்கு உட்பட்டது மற்றும் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும்.)

மேலும் படிக்க | 6 மாதங்களில் இருமடங்கு லாபம் கொடுத்த பங்கு! 200% லாபம் கொடுக்கும் மல்டிபேகர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News