காவிரி விவகாரம் தொடர்பாக மார்ச் 29-ம் தேதி வரை காத்திருப்போம் -POS!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மார்ச் 29-ம் தேதி வரை காத்திருப்போம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 19, 2018, 01:01 PM IST
காவிரி விவகாரம் தொடர்பாக மார்ச் 29-ம் தேதி வரை காத்திருப்போம் -POS! title=

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15-ந் தேதி துவங்கியது. தமிழக சட்டசபையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்றே மீண்டும் சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்ட சபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று (திங்கட் கிழமை) மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் துவங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. 

இதையடுத்து கேள்வி நேரம் முடிந்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காவிரி விவகாரத்தை எழுப்பினார். அப்போது பேசிய அவர், ஆந்திர முதல்வர் அந்த மாநில நலன்களை பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார். தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க எம்பிகள் ஆதரிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதால் மத்திய அரசு கலைந்து விடாது என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், மாநில உரிமைகளை பாதுகாக்க நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் தெரிவித்துள்ளார்.

இவரது கேள்விக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது....! 

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தையும், காவிரி விவகாரத்தையும் ஒப்பிட வேண்டாம். இவை இரண்டையும் இணைத்து எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க எம்பி-கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் பதிலுக்காக வரும் 29-ம் தேதி வரை பொறுத்திருப்போம் என அவர் தெரிவித்தார். 

மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் மீண்டும் ஒன்று கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Trending News