கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மற்றும் பாஜ கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடகாவில் வாழும் லிங்காயத் பிரிவினர் தங்களை வீர சைவர்கள் என்றுக் கூறிக்கொண்டு தனி வழிப்பாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர். பசவர் என்பவர் லிங்காயத் பிரிவை தோற்றுவித்தார். எங்களை புத்த, சீக்கிய மதங்களை போல் லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் வேண்டும் என நீண்ட காலமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
லிங்காயத் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மதம் கோரிக்கைக்கு காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த ஒப்புதலை கர்நாடகா அமைச்சரவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
லிங்காயத் சமூகத்தின் தனிமத கோரிக்கையை அங்கீகரித்தது கர்நாடக அரசு
இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக பொது செயலாளர் முரளிதர் ராவ், ஓட்டுக்காக சித்தராமையா அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார் என விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், லிங்காயத் மதத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்த்து வழங்கியுள்ளாது கர்நாடகாவில் செயல்படும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு.
லிங்காயத்: நெருப்புடன் விளையாடும் சித்தராமையா ஜி -முரளிதர் ராவ் ட்விட்
லிங்காயத் சமூகத்தினா் தனி மதமாக அறிவிக்கப்பட்டால், அவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய இணை அமைச்சா் அர்ஜூன் ராம் மெஹ்வால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.