இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ஐசிஎஸ்ஐ) சிஎஸ் புரொபஷனல் முடிவுகள் 2022: இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ஐசிஎஸ்ஐ) நடத்தும் சிஎஸ் புரொபஷனல் தேர்வு 2022 (ஐசிஎஸ்ஐ சிஎஸ் புரொபஷனல் 2022) இல் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. அதன்படி இந்த தேர்வு முடிகள் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியானது. சிஎஸ் புரொபஷனல் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. ஐசிஎஸ்ஐ ஆல் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான icsi.edu க்குச் சென்று தங்கள் மதிப்பெண்ணைச் சரிபார்க்கலாம் .
ஐசிஎஸ்ஐ தேர்வர்கள் தேர்வு முடிவு வெளியானவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | TNPSC வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கியது
ஐசிஎஸ்ஐ சிஎஸ் புரொபஷனல் ரிசல்ட் 2022: சிஎஸ் புரொபஷனல் தேர்வு முடிவுகளை எப்படிச் சரிபார்க்கலாம்
* முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான icsi.edu க்குச் செல்லவும்.
* அதன் பிறகு புதிய பக்கத்தில் ஐசிஎஸ்ஐ சிஎஸ் புரொபஷனல் ரிசல்ட் இன் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்.
* இப்போது உங்கள் முடிவு உங்கள் திரையில் தோன்றும்.
* அதைப் பதிவிறக்கவும் அல்லது பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
# விண்ணப்ப எண் மற்றும் பதிவு எண்ணின் உதவியுடன் மட்டுமே முடிவைச் சரிபார்க்க முடியும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்த ஐசிஎஸ்ஐ சிஎஸ் புரொபஷனல் தேர்வை 2022 டிசம்பர் 21 முதல் 30 வரை இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் (ஐசிஎஸ்ஐ) நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அறிவிப்பு: தேர்வில் வெற்றிபெற ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும். அதேபோல் இந்த முடிவு ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும் என்பதையும், முடிவின் நகல் எதுவும் தபால் மூலம் அனுப்பப்படாது. இதற்கிடையில் சிஎஸ் எக்ஸிகியூட்டிவ் ஜூன் 2022 தேர்வு (சிஎஸ் முடிவுகள் ஜூன் 2022) முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியிடப்படும். சிஎஸ் எக்ஸிகியூட்டிவ் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் புரொபஷனலுக்கு செய்யப்படுவார்கள்.
மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ