இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!
> "கிளாஸில நுரையும் ப்ளேட்ல கறியும்" முகநூல் குழு மீது வழக்கு!!
"கிளாஸில நுரையும் ப்ளேட்ல கறியும்" என்ற முகநூல் குழு மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்!
> TNPSC நேர்காணல் தேர்வை நடத்த புதிய முறை அறிமுகம்!!
நேர்காணல் நடத்தும் குழுவை குழுக்கல் முறையில் தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி திட்டம்!!
> கடவுள் விமர்சன வழக்கு: பாரதிராஜாவுக்கு நீதிபதி கேள்வி
தினமும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜாவால் கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன்? என உயர்நீதிமன்றம் பாரதிராஜாவுக்கு கேள்வி
> நீட் கருணை மதிப்பெண்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
> மணிப்பூரில் தொடர் மழை: நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி
மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!
> CBSE முடிவை பொறுத்தே தமிழக அரசின் முடிவு -விஜயபாஸ்கர்!
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!
> CBSE பள்ளியில் 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கிடையாது -CBSE!
CBSE பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் இருக்காது என CBSE தரப்பிலான சுற்றறிக்கை மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது!
> FIFA _2018: பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தி ஃபைனலில் நுழைந்த பிரான்ஸ்!
12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலில் பிரான்ஸ்!....அரை இறுதியில் பெல்ஜியத்தை 1-0 என அபாரமாக வென்றது!
> பெரிய பொருளாதார நாடு: இந்தியாவுக்கு 6வது இடம்- உலக வங்கி!!
உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வங்கி புள்ளி விபர அறிக்கை வெளியிட்டுள்ளது.
> ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தொடர்ந்து 3-வது நாளாக தடை!!
ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது!!
> 59 பிஞ்சு குழந்தைகளை அறையில் சிறை வைத்த பள்ளி! காரணம் இதுதான்!!
டெல்லியில் Rabia Girls Public School என்ற பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத 59 குழந்தைகளை அறையில் பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
> உத்தராகண்ட் கனமழையில் அடித்து செல்லப்பட்ட பாலம்!
உத்தராகண்ட் மாநில பிதோராகர் என்ற இடத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போடப்பட்டுள்ள இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
> பா.ரஞ்சித் - ராகுல் காந்தி சந்திப்பு: சந்திப்பின் பின்னணி என்ன?
இயக்குநர் பா.ரஞ்சித்துடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்!
> மீண்டும் சென்னை-மதுரை-மும்பை இடையேயான Air India விமான சேவை- பொன்.ராதாகிருஷ்ணன்
தற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
> ரஜினியின் 2Point0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2Point0 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
> WATCH: இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற அவலம்!
இறந்த தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து மகன்கள் கொண்டு சென்ற விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
> பாக்.,ல் அடாவடி! சீக்கியரின் தலைப்பாகையை கழற்ற வைத்த அவமதிப்பு!
பாகிஸ்தான் லாகூரில் வசித்து வரும் சீக்கிய போலீசின் தலைப்பாகையை கழற்ற வைத்து அவமதிப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
> தொடர் கனமழை: வால்பாறை, பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை!
கோவை, நீலகிரி மாட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை மற்றும் பந்தலூர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
> பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் அசம்பாவிதம்: 13 பேர் பலி!
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகினர்.
> மத்திய பிரதேசத்தில் புதிய மாவட்டம் உறுவானது!
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில், புண்டேகாந்த் பகுதியில், புதிய மாவட்டத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது!
> 11-07-2018: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 72.03 காசுகளாகவும் விற்பனை!!