நெருப்புடா..சிஎஸ்கே டா..கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ்

ரஜினி ஸ்டைலில் கெத்து கட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 28, 2018, 02:20 PM IST
நெருப்புடா..சிஎஸ்கே டா..கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் title=

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

வீடியோ: ஸ்டண்ட்மேன் ஆகா மாறிய CSK வீரர் முரளி விஜய்

அதுவும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் போட்டோ, வீடியோ மற்றும் ட்வீட் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

சிஎஸ்கே: வைரலாகும் எம்.எஸ் தோனியின் பார்க்கிங் ஷாட் வீடியோ

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் ஹர்பஜன் சிங், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், முரளி விஜய், ஹர்பஜன் சிங், டுவைன் பிராவோ மூன்று பேரும் கண்ணாடி போட்டுகொண்டு, நெருப்புடா... சிஎஸ்கே டா... என ரஜினிகாந்த் நடித்த கபாலி பட ஸ்டைலில் கெத்து காட்டியுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Trending News