ஜெ., மரணம்: மேலும் இருவரை விசாரிக்க சசி தரப்பில் கோரிக்கை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரணை சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என விசாரணை கமிஷனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 27, 2018, 06:42 PM IST
ஜெ., மரணம்: மேலும் இருவரை விசாரிக்க சசி தரப்பில் கோரிக்கை! title=

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரணை சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என விசாரணை கமிஷனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர விவரங்கள் குறித்து  பத்திரிகைகளில் வந்த செய்திகள் அனைத்தும் உண்மையானவை தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டு, 74 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். 

ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.

ஆனால் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் இதயம் திடீரென்று செயல் இழந்ததாகவும், இதனால் அவர் மரணம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசாணை வெளியிட்டது. 

இந்த விசாரணை கமிஷன் மூலம் விசாரணை குழு தலைவர் ஆறுமுகசாமி அவர்கள் பலரை விசாரித்து வருகின்றார். இந்நிலையில் இந்த விசாரணையில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்டோரையும் விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News