கேஸ் மற்றும் அசிடிட்டியால் அவதியா? அப்போ இந்த 3 யோகாசனங்கள் போதும்

Yoga To Relieve Gas: வயிற்றில் உள்ள வாயு மற்றும் அமிலத்தன்மையை அகற்றுவதில் பல யோகாசனங்கள் உள்ளன. இவற்றை தினமும் செய்யலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 18, 2023, 05:15 PM IST
  • யோகா ஆசனங்கள் வயிற்றில் இருந்து வாயுவை அகற்ற உதவும்.
  • அமிலத்தன்மையில் இருந்து நிவாரணம் பெற யோகா.
  • ஆசனத்தை 4 முதல் 5 வினாடிகள் மட்டும் செய்தால் போதும்.
கேஸ் மற்றும் அசிடிட்டியால் அவதியா? அப்போ இந்த 3 யோகாசனங்கள் போதும் title=

யோகா போஸ்கள்: நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க யோகா செய்யப்படுகிறது. யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பராமரிக்கும். யோகா செய்வதன் மூலம் மனமும் மூளையும் அமைதியாக இருப்பதோடு இடுப்பு, கை, கால், முதுகு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட யோகா செய்யலாம். அதேபோல் தினமும் வயிற்றுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஏராளம். வாயு, அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வாய்வு ஆகியவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில யோகா ஆசனங்கள் உள்ளன, அவை தினமும் செய்தால், வயிற்றுப் பிரச்சனைகளைக் குறைக்கின்றன, மேலும் அமிலத்தன்மை மற்றும் வாயு உங்களைத் தொந்தரவு செய்யும் சமயங்களில் கூட, இந்த யோகா ஆசனங்கள் நிவாரணம் பெறவும் வயிற்றில் இருந்து வாயுவை அகற்றவும் உதவும்.

அமிலத்தன்மை மற்றும் வாயுவில் இருந்து நிவாரணம் பெற யோகா | Yoga Poses For Acidity And Gas Relief

பவன முக்தாசனம் 
இந்த யோகாசனம் செய்வது எளிது. இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் கால்களை நீகட்டி நேராக உட்காரவும். முதுகுத்தண்டை நேராக வைத்தபடி கைகளை மேலே உயர்த்தவும். பின் மூச்சை வெளியிடும்போது இடுப்பை முன்னோக்கி வளைத்து, மேல் உடலை கீழ் உடலின் மீது வைக்கவும். உங்கள் கைகளால் கால்விரல்களை பிடிக்கவும் மற்றும் மூக்கால் முழங்கால்களைத் தொட முயற்சிக்கவும். ஆரம்பத்தில் இந்த யோகம் செய்வது கடினமாக இருக்கலாம் ஆனால் படிப்படியாக நீங்கள் நல்ல நிலைக்கு வருவீர்கள். இந்த ஆசனத்தை 4 முதல் 5 வினாடிகள் மட்டும் செய்தால் போதும்.

மேலும் படிக்க | இந்த பானங்களை காலையில் குடிச்சா போதும்: வேகமா எடையை குறைக்கலாம்

ஹலாசனம் 
வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் பெற ஹலாசனம் செய்யலாம். முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். பின் மூச்சை உள்ளிழுத்த படி, இரண்டு கால்களையும் ஒன்றாக மேலே உயர்த்த வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வைத்திருக்க வேண்டும். பின் கால்களை மெதுவாக தலைக்கு மேல் உயர்த்து, முதுகை வளைத்து பாதங்களை தலைக்கு பின்புறத்தில் உள்ள தரையைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிட வேண்டும். பின்பு மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த ஆசனத்தை 3-5 முறை செய்யலாம். இந்த ஆசனம் செய்வதன் மூலம், வயிற்றுப் பிரச்சனை நீங்குவது மட்டுமின்றி, முதுகுவலியிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

பவன முக்தாசனம்
பவன முக்தாசனம் செய்வதால் வயிற்று வாயுவை எளிதில் வெளியேற்றலாம். இந்த ஆசனத்தை செய்ய, முதலில் தரையில் விரிப்பை விரித்து நேராக படுத்துகொள்ளவும். வலதுகால் முட்டியை மடித்து வயிற்றை நோக்கி அழுத்துமாறு வைக்க வேண்டும். அப்போது இடது கால் நேராக நீட்டி இருக்க வேண்டும். இப்போது தலையை உயர்த்தி எழுந்து முகத்தின் தாடைபகுதி முகவாய் பகுதியை வலது கால் முட்டியின் ஈது வைக்க வேண்டும். இதை செய்யும் போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு அதே நிலையில் முகத்தை வைத்து மூச்சை அடக்கி 10 முதல் 20 நிமிடங்கள் வரை இருந்து பிறகு கால்களை பொறுமையாக தளர்க்க வேண்டும். பிறகு வலது காலை நீட்டி இடது காலை மடக்கி செய்ய வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம், வயிற்றில் இருந்து வாயு வெளியேறி, நிம்மதியாக உணருவீரகள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தத்தில் 4 வகை: அதனை எவ்வாறு தடுக்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News