டெல்லி மருத்துவமனையில் யார் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம்; ஆளுநர் உத்தரவு!

டெல்லியின் துணைநிலை ஆளுநரும், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) தலைவருமான அனில் பைஜால், கொரோனா சிகிச்சை குறித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவை மாற்றியுள்ளார்.

Last Updated : Jun 8, 2020, 07:44 PM IST
  • முன்னதாக கெஜ்ரிவால் அரசாங்கம் வெளிமாநில நபர்களுக்கு இனி மாநில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படாது என்று கூறியிருந்தது.
  • டெல்லி அரசாங்கத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் டெல்லி மக்கள் மட்டுமே சிகிச்சை பெறுவார்கள்.
  • எந்தவொரு நோயாளியும் மத்திய அரசின் அதிகார வரம்பைக் கொண்ட AIIMS உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் எனவும் தெரிவித்தது.
டெல்லி மருத்துவமனையில் யார் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம்; ஆளுநர் உத்தரவு!

டெல்லியின் துணைநிலை ஆளுநரும், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) தலைவருமான அனில் பைஜால், கொரோனா சிகிச்சை குறித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவை மாற்றியுள்ளார்.

டெல்லியில் வசிக்கும் கொரோனா நோயாளிகளில், டெல்லியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இலவச மருத்துவம் அளிக்கப்படும் என முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். மேலும் மாநில அரசு மருத்துவமனைகளில் இந்த நோயாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வரின் முடிவை மறுத்து ‘டெல்லியின் மருத்துவமனைகளில் யாரையும் தடை செய்யக்கூடாது, சிகிச்சைக்காக யார் வந்தாலும் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்’ என்றும் லெப்டினன்ட் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் பிற மாநிலத்தவருக்கு இனிமேல் சிகிச்சைக் கிடையாது -கெஜ்ரிவால் முடிவு...

முன்னதாக கெஜ்ரிவால் அரசாங்கம் வெளி நபர்களுக்கு இனி மாநில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படாது என்று கூறியிருந்தது. டெல்லி அரசாங்கத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் டெல்லி மக்கள் மட்டுமே சிகிச்சை பெறுவார்கள். எந்தவொரு நோயாளியும் மத்திய அரசின் அதிகார வரம்பைக் கொண்ட AIIMS உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என தெரிவித்தது.

மேலும், டெல்லி மக்களுக்கு மாநில அரசு மருத்துவமனைகள் இலவசமாக செயல்படும் என்றும் டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். மத்திய அரசு மருத்துவமனையில் யார் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம். டெல்லி அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் 10,000-10,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் மாதம் வரை டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் முழு நாட்டு மக்களுக்கும் திறந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நேரத்தில், எங்கள் டெல்லி மருத்துவமனைகளில் 60 முதல் 70 சதவீதம் பேர் டெல்லி க்கு வெளியே இருந்து வந்தவர்கள். இவர்களுக்காக ஆம் ஆத்மி அரசாங்கம் படுக்கைகளை ஏற்பாடு செய்து வரும் நிலையில் கொரோனாவின் வழக்குகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

காய்ச்சல், தொண்டை வலி; கோவிட் -19 க்கு பரிசோதனை செய்யும் டெல்லி முதல்வர்...

இந்நிலையில் தற்போது டெல்லியில் வசிப்பவர் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு நோயாளிக்கும் மருத்துவ சிகிச்சை மறுக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு டெல்லி துணைநிலை ஆளுநரும், DDMA தலைவருமான அனில் பைஜால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

More Stories

Trending News