முலாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா; நிபுணர்கள் கூறுவது என்ன...

Muskmelon Side Effects: முலாம்பழம் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது என்றாலும், அதனை தவறான நேரத்தில் சாப்பிடால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 25, 2022, 11:24 AM IST
முலாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா; நிபுணர்கள் கூறுவது என்ன... title=

முலாம்பழம்: கோடையில் முலாம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதனை தவறான நேரத்தில் சாப்பிடால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

பலருக்கு முலாம்பழத்தை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது தெரிவதில்லை. இதனால் அவர்களுக்கு சில உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா, கூடாதா என்ற எண்ணமும் சிலரது மனதில் ஓடுகிறது. எனவே முலாம் பழத்தை சாப்பிட சரியான நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முலாம்பழம் காலையில் சாப்பிடுவது சரியா தவறா?

முலாம்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இதில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. எனவே, வெயில் காலத்தில் முலாம்பழம் உட்கொள்வதால், உடல் நீர்ச்சத்துடன் இருக்கும். உடலில்  தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படாது. பல நோய்களை தடுத்து பாதுகாக்கும் முலாம்பழம் கோடை காலத்திற்கு ஏற்ற உணவு என்பதைல் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

இருப்பினும் காலையில், வெறும் வயிற்றில் அதை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும். இதை காலி வயிற்றில் சாப்பிட்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். இரவிலும் சாப்பிடக் கூடாது. பிற்பகல் நேரம் அதை சாப்பிட சரியான நேரமாக கருதப்படுகிறது.

முலாம்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

முலாம்பழத்தை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதனால்  நீரிழிவு, இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உங்களை அண்டாமல் இருக்கும். முலாம்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால்,  இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை

முலாம்பழத்தில் உள்ள அடினோசின் இரத்தத்தை மெலிதாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதால், ரத்த கட்டிகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எனவே  இதய நோய்களின் அபாயம்  குறைகிறது.

முலாம்பழம் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் அதில் நார்ச்சத்து உள்ளது. எனவே இதை உட்கொள்வது வயிற்றை சுத்தப்படுத்தி, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் இது பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். அதாவது, விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இது சருமத்திற்கும் நன்மை பயக்கும். இதன் மூலம் உங்கள் சருமம் பளபளப்பாகவும் இருப்பதோடு,  இதில் உள்ள அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண்பார்வை திறனை அதிகரிக்கும். எ

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News