Benefits Of Beetroot Juice : இந்தியாவின் பிரபலமான காய்கறியாக இருப்பது, பீட்ரூட். கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அனைத்து இல்லங்களிலும் வாரத்தில் ஒரு முறையாவது பீட்ரூட்டை வைத்து பொறியல் செய்து விடுவர். இந்த சிவப்பு நிற காய்கறி, சரும பிரச்சனைகளில் இருந்து உடல் நல பிரச்சனைகளை தீர்ப்பது வரை பல்வேறு பலன்களை கொடுக்கிறது பீட்ரூட். இதில், ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் மற்றும் புரத சத்துகள் ஆகியவை நிறைந்து இருக்கின்றன. இதை சாப்பிட்டால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் பெண்களுக்கும், பெண்களின் உடலுக்கும் என்னென்ன நன்மைகள் தெரியுமா? இங்கு பார்ப்போமா?
வைட்டமின் மற்றும் உயிர்ச்சத்து:
பீட்ரூட்டில், புரத சத்துகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ஒரு கப் பீட்ரூட் ஜூஸில், பெண்களுக்கு தேவையான முக்கிய புரத சத்துகள் இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் சி சத்துகள், முக சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் இருக்கும் காலெஜின் சத்துகள், இந்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. அது மட்டுமன்றி, கர்ப்பமாக இருக்கும் பெண்கள், இதை குடித்தால் அவர்களுக்கு தகுந்த ஊட்டச்சச்த்து கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இதயத்திற்கு நல்லது:
பீட்ரூட்டில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் மாக்னீசிய சத்துகள், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். அது மட்டுமன்றி, இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் (Oxidative Stress) உடலில் ஏற்படும் அழற்சியை நீக்க உதவும். இதய நோய் என்பது பெண்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. பீட்ருட் சாரில் இருக்கும் நைட்ரேட்டுகள், ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இருதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு LDL Cholesterol எனப்படும் கெட்ட கொழுப்பு காரணமாக இருக்கிறது. இதை குறைக்க, பீட்ரூட் சாறு உதவுகிறது.
ஸ்டேமினாவை அதிகரிக்கும்:
உடலை ஆக்டிவாக வைத்திருக்க நினைக்கும் பெண்கள், தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பீட்ரூட், இயற்கையாகவே தடகள செயல்திறனை அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது. பீட்ரூட்டில் இருக்கு நைட்ரேட், ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்க உதவுவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், உடற் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் அல்லது அதன் பிறகு குடிப்பதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.
அறிவாற்றல் திறன்:
பீட்ரூட் குடிப்பதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், மூளைக்கு செல்லும் நரம்புகளுக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அறிவாற்றல் திறன் சரியாக செயல்பட்டு, நினைவுத்திறன் மேம்படும். பீட்ரூட் ஜீஸில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதற்கு உதவுகிறது. இது, மறதி நோய் எனப்படும் Alzheimer's நோயை வராமல் தடுக்கலாம்.
முடிக்கு நல்லது:
பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் சி சத்துகள், தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும். வெப்பத்தால் இருந்து வெளிவரும் யுவி கதிர்கள், முடி இழப்பு அபயத்தை ஏற்படுத்தி, முடியை வெடிக்க செய்யலாம். இதை தவிர்க்க, பீட்ரூட் ஜூஸை குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ