Health Tips: உடல் எடை பிரச்சனை என்பது பலருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகும். உடல் எடையை குறைக்க அனைவரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
உடல் எடையை குறைக்க மக்கள் பின்பற்றும் உணவு மற்றும் பாண வகைகளில் கிரீன் டீ மற்றும் பிளாக் காபி ஆகியவையும் உள்ளன. இவை இரண்டும் மிகச்சிறந்த பானங்களாக கருதப்படுகின்றன. இவை பால் சேர்க்கபப்டும் தேநீர் மற்றும் காபிக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகின்றன.
கிரீன் டீ மற்றும் பிளாக் டீ என இரண்டிலுமே குறைவான கலோரிகளும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. கிரீன் டீ மற்றும் பிளாக் காபி, இரண்டில் எந்த பானம் உடல் எடையை குறைக்க அதிக பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
க்ரீன் டீ –யா பிளாக் காபி-யா?
உடல் எடையை குறைக்க (Weight Loss) முயற்சி செய்பவர்களுக்கு, பிளாக் காபீ மற்றும் கிரீன் டீ ஆகிய இரண்டு பானங்களுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால் முழு ஆரோக்கியம் குறித்து நாம் பேசினால், பிளாக் காபியை விட கிரீன் டீ தான் அதிக நன்மை அளிக்கின்றது என நிபுணர்கள் கருதுகிறார்கள். இதில் ஆண்டிஆக்ஸிடண்டுகள் (Antioxidants) நிறைந்துள்ளன. கிரீன் டீ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
ALSO READ: காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
இது தவிர, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், உடல் எடையை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும்.
கிரீன் டீ (Green Tea) அல்லது பிளாக் காபியை குடித்தால் மட்டும் நீங்கள் எடையை குறைத்து விட முடியாது. உடல் எடையை குறைக்க உங்கள் வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
அதிக எடை இழப்புக்கு கிரீன் டீ
கிரீன் டீயில் காஃபின் மற்றும் கேடசின் எனப்படும் ஒரு வகை ஃபிளாவனாய்டு (Flavonoid) உள்ளது. கேடசின் உண்மையில் ஒரு வகை ஆண்டிஆக்சிடெண்ட் ஆகும். கிரீன் டீ பாதுகாப்பான பானமாகக் கருதப்படுகிறது. ஆனால் தினமும் 2 முதல் 3 கோப்பைகளுக்கு மேல் அருந்தக்கூடாது. கிரீன் டீ பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது என்பது உண்மைதான், ஆனால் அதில் ஓரளவு காஃபின் உள்ளது. ஒரு நாளில் காஃபின் அதிகமாக உட்கொள்வது தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது, இதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதிக எடை இழப்புக்கு பிளாக் காபி
பெரும்பாலான மக்கள் விரும்பும் மற்றொரு பிரபலமான பானம் காபி. குறிப்பாக மக்கள் எடை குறைக்க முயற்சிக்கும்போது, பிளாக் காபியையும் அதிகம் அருந்துகிறார்கள். இது விழிப்புணர்வை அதிகரிப்பதோடு டைப் 2 நீரிழிவு நோயின் (Type 2 Diabetes) அபாயத்தைக் குறைக்கிறது.
பிளாக் காபி (Black Coffee) பாரம்பரிய காபியின் ஆரோக்கியமான பதிப்பாகும். ஏனெனில் இது கிரீம் மற்றும் சர்க்கரை இல்லாமல் அருந்தப்படுகின்றது. பிளாக் காபி பொதுவாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களின் தேர்வாக இருக்கிறது. இதையும் அதிகப்படியாக உட்கொண்டால் அது சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ALSO READ: Blood Clot Risk: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஆபத்து குறைவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR