காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

காபியில் சில உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. ஆனால் அதை அளவாக தான் குடிக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2021, 04:27 PM IST
காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்! title=

காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கும் காபி குடுக்கும் பழக்கம் இருக்கும். காபிக்கு அடிமையாகி இருப்பவர்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. காபி குடித்தால் மட்டுமே அவர்களால் அவர்களின் வேலையை ஒழுங்காக செய்ய முடியும். இதையெல்லாம் மீறி காபியில் உள்ள உடல்நல பயன்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? காபி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறியிருப்பார்கள். ஆனால் அதனைப் பற்றி சற்று ஆழமாக பார்க்கையில், அது பொய் என்பது உங்களுக்கு தெரிய வரும். காபியில் சில உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. ஆனால் அதை அளவாக தான் குடிக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

காபியில் (Coffee) ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில குறிப்பிட்ட வியாதிகள் ஏற்படும் இடர்பாட்டை இது பெருமளவில் குறைக்கும். காபி நமக்கு அளித்திடும் உடல்நல பயன்களைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். காபியை பற்றி நடத்தப்பட்ட பல ஆய்வுகளும் சுவாரசியமான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளது.

ALSO READ | Health News: கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள், பானங்கள்

* மனநிலை, நினைவாற்றல், எச்சரிக்கை தன்மை மற்றும் எதிர்வினை நேரம் போன்ற சில மூளையின் செயல்பாடுகளை காபி மேம்படுத்தும். 
* காபி உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அது உங்கள் அமைப்பை ஊக்குவிப்பதால் உங்களால் தற்காலிகமாக புத்திசாலித்தனமாக சிந்திக்க முடியும்.
* சோர்வான (Stress) உங்கள் உணர்ச்சியை சில நேரத்திற்கு மறக்கடிக்க செய்யும் காபி. காப்ஃபைன் என்ற ஊக்குவிக்கி அதில் உள்ளதால், கொஞ்ச நேரத்திற்கு உங்களால் ஆற்றலுடன் செயல்பட முடியும். உங்கள் குருதியோட்டத்தில் காப்ஃபைன் வந்து விட்டால், அது மூளையை வேகமாக சென்றடையும்.
* காபியில் உள்ள காப்ஃபைன் அடினோசினை (நரம்பியகடத்துகை) தடுக்க உதவும். இதனால் நரம்பணுக்களை சூடேறும். ஈரலை பாதுகாக்கும் உங்கள் கல்லீரலைப் பாதுகாக்கவும் காபி பயன்படுகிறது என சில ஆய்வுகள் கூறுகிறது.
* காபி உங்களை ஊக்குவிப்பதால், மன அழுத்தத்தை எதிர்த்து அது சிறப்பாக போராடும். 
*  உங்கள் உடல் எடையை குறைக்க காபி உதவும் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்கும் பொருட்களை தயாரிப்பவர்கள் அதில் காப்ஃபைன் பயன்படுத்துவதற்கான காரணமே இது தான். காப்ஃபைன் உங்கள் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்த உதவும். இதனால் கொழுப்பு வேகமாக எரியும்.
* புற்றுநோய்க்கான (Cancer) இடர்பாட்டையும் காபி குறைக்கும். காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது காபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இதனை குறைவான அளவில் குடித்தால், அது ஆரோக்கியமான பானமாக இருக்கும். 

ALSO READ | காலை வேளையில் காலி வயிற்றில் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News